பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 & வல்விக்கண்ணனின் மணியான கதைகள் | கொடுத்துச் சரியாகப் பற்ற வைத்து விடலாம் என்று ஆசைப் பட்டேன். நாளைக்குப் பார்க்கலாம்; நாளை ஆகட்டும் என்று வாய்தா போட்டு வந்தேன். அதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது, முடிவில், அவர்கள் சென்றிருந்த ஊரில், வேகமாகப் பரவி விஷ ஜுரத்துக்கு உமாவும் பலியாகிவிட்டாள் என்று செய்தி கிடைத்தது. எனக்குப் பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஆற்ற முடியாத பெருந்துயரை அடைந்து விட்டதாகவே கருதினேன். பாவிகள் எவ்வளவோ பேர் இருக்க, சாவு எனும் தண்டனையை அடைய வேண்டிய கயவர்கள், கொடியவர்கள் எவ்வளவோ பேர் இருக்க, புது மலர் போன்றவளை-வாழ்வின் வாசல் படியிலே இப்பொழுது தான் அடியெடுத்து வைத்திருந்த யுவதியைகளங்கம் எதுவும் இல்லா இனியாளை-பாவ நினைப்பையே அறிய முடியாத புனிதத்தை மரணம் ஏன் திருகி எறிய வேண்டும்? இந்த உலகத்தில், மனித வாழ்க்கையில் நீதி நியாயம் தர்மம் என்பதெல்லாம் உண்மையாகவே செயல்படுகின்றனவா? இவ்வாறு அடிக்கடி என் மனம் உளையும். எனது வாழ்வே அர்த்தமற்றுப் போனதாகத் தோன்றியது. உமாவோடு நிகழ்ந்த கடைசிச் சந்திப்பு வேதனை தந்ததாக அமைந்ததே என்ற வருத்தம் வேறு. எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. நான் அந்த ஊரைத் துறந்து எங்கள் சொந்த ஊரை அடைந்தேன். அமைதி என்பதை அறிய முடியாத சுழல் காற்றைப் போல் அங்குமிங்கும் அலைந்து திரிந்தேன். பலப்பல வேலைகளைப் பார்த்தேன். காலம் எனும் வைத்தியன் என் மன வியாதியை ஒருவாறு குணப்படுத்தினான். ஆயினும் நான் உமாவை முற்றிலும் மறந்தவனல்லன். அவள் நினைவு கோயில் கொண்டு விட்ட என் உள்ளத்திலே வேறு எந்தப் பெண்ணுருவமும் எட்டிப் பார்த்து இடம் பிடிக்க முடியவில்லை. - கிருஷ்ணபிள்ளை பெருமூச்செறிந்தார். இந்தச் சங்கிலியை ஏதோ ஒரு பெட்டியில் போட்டிருந்தேன். அதை