பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை வாழ்வு | & 84 நான் மறந்தே போனேன். இன்று தற்செயலாக இது என் கையில் கிட்டியது' என்றார். காவியத்தில், கதைகளிலே வருவதுபோல் இருக்கிறது. சாதாரண நபராகத் தோன்றும் உம்முடைய வாழ்வில் கூடச் சோக காவியம் அரங்கேறி, திடுமென முற்றுப் பெற்று விட்டது போலும்! அல்லது, இன்ப நாடகம் தொடக்கமாகிச் சோகக் கதையாக முடிந்து விட்டது என்று சொல்லலாம் என்று நாராயணன் கூறினார். எனக்கு உம் மீது பொறாமை உண்டாகிறது ஐயா. உண்மையாகத் தான் சொல்கிறேன். உம்மை ஒருத்தி காதலித்தாள். காதலித்த பெண்ணுக்காக நீர் உமது வாழ்க்கையையே தியாகம் செய்து கொண்டிருக்கிறீர். இச் சங்கிலி-புனிதமான காதல் சின்னம்ஒரு காவியப் பொருளாகவே தோற்றம் அளிக்கிறது. என்றார். இன்னும் விரிவாகப் பேசிவிட்டுப் போனார். அவர் போன பிறகும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் கிருஷ்ணபிள்ளை. ஊம். கொடுத்து வைக்கவில்லை! நான் சுவையாகச் சொன்ன நிகழ்ச்சியையெல்லாம் நானே என் வாழ்வில் அனுபவிக்கச் கொடுத்து வைக்கவில்லை! என்றோ ஒரு நாள் ரயில் வண்டியில், பெஞ்சு அடியில் கண்டெடுத்த காகிதப் பொட்டலத்தில் இருந்தது இந்தச் சங்கிலி எந்தச் சிறுபெண் அணிந்ததோ! அறுபட்டு, மறதியாக யாரால் விடப்பட்டதோ உமா என்றொரு விளையாட்டுப் பெண் என் வாழ்வில் குறுக்கிட்டிருந்தால்-என் வாழ்க்கை இன்னும் இனிமைமிக்கதாக-பசுமை நிறைந்ததாக-வளமுற்றிருக்கக் கூடும். காலம் தான் வஞ்சித்து விட்டதே ' என்று முணுமுணுத்தார். அவருக்குச் சிரிப்பு எழுந்தது. நாராயணன் நம்பி விட்டான் ஆளுக்குள்ளே ஆளு என்பது போல, கிருஷ்ண பிள்ளையின் உள்ளே புதிரான, மர்மமான ஆளு மறைந்திருப்பது நமக்கு இத்தனை நாட்கள் தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணுவான். வேண்டியவர்கள்,