பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 & ಮಿರಾಹಿತTಣTಣಗಿಫೆr மணியான கதைகள் தெரிந்தவர்களிடம் எல்லோரிடமும் இதே பிளேட்டை வைக்க வேண்டியது தான். அங்கங்கே சுவை சேர்க்கும் நகாசு வேலைப்பாடுகளைக் கூட்டிக் கொண்டால், இன்னும் ரசமாக இருக்கும்! என்று அவர் எண்ணினார். கிருஷ்ண பிள்ளைக்குக் கை கொஞ்சம் நீளம் தான்பிறர் பாக்கெட்டில் போட்டு வெற்றிகரமாக வெளியே எடுக்கிற அளவுக்கு அல்ல! தனது முதுகில் தானே தட்டிக் கொள்கிற அளவுக்கு நீளம்! நாளடைவில் உமா என்றொரு காதலி அவருக்கு நிஜமாகவே இருந்தாள், அவள் அவர் வாழ்வின் சிறு பகுதியை இன்ப வசந்தமாக மாற்றிவிட்டு, திடீரென்று மறைந்து போனாள் என்று கிருஷ்ணபிள்ளையே நம்ப ஆரம்பித்து விடுவார். அதுவும் அவர் ஆற்றலுக்கு ஏற்றதாகத் தான் இருக்கும். క్ష్వి