பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் எனும் புதிர் & 92 அந்தப் பொம்மையை வாங்க வேண்டும் என்ற ஆசை பார்வதிக்கே ஏற்பட்டது என்றால், குழந்தை அதை விரும்பியதில் தவறு உண்டா? ஆனால், விலைதான் - - § -- - مسيym ... پر y அநியாயமாக இருந்தது. பத்து ரூபாயாம்! பத்து ரூபாய் கொடுத்து நாம் பொம்மை வாங்க முடியுமா?’ என்று பார்வதி எண்ணினாள். அத்துடன் அவள் ஆசை செத்து விட்டது. குழந்தைக்குத் தெரியுமா பொருளதார நிலைமை எல்லாம் : மணி அழுதான். தன் தலை மயிரைப் பிய்த்தான். தாயின் முகத்தில் அறைந்தான். அவன் மூஞ்சி விகாரமாக மாறியது. வாய் அகல விரிந்து, கன்னங்கள் பிதுங்கி, கண்கள் குறுகி மூடி, நீர் இருபுறமும் கோடு தீட்டி ஒட, அழகு முகம் அவலட்சன ஒவியமாக மாறிவிட்டது. அறைபடவும் அந்த விகாரம் மிகுந்த கோரமாக மாறியது. அதற்கு யார் என்ன செய்வது? பிள்ளைப் பாசத்தைவிட பணத்துக்கு மதிப்பு அதிகம் தான். ஆகவே, பொம்மை கடை அலங்கார மாகவே அமர்ந்துவிட்டது. அழகான பொம்மையின் நினைப்பு மணியின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவன் பல முறைகள் கேட்டுப் பார்த்தான். முரண்டு பிடித்தான். உரிய பவன்கிட்டவில்லை. உதைதான் கிட்டியது. வெறும் ஏச்சும் கிடைத்தது, மெது மெதுவாக அவன் பொம்மைப் பாப்பா' பேச்சை விட்டுவிட்டான். ஆனால், அந்த ஆசை மணியின் பிஞ்சு உள்ளத்தின் அடித்தளத்திலே பதுங்கிக் கிடந்தது என்பது பின்னர் விளங்கியது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மணிக்கு ஜூரம் வந்தது! முதலில் சாதாரணமாகத் தோன்றியது பிறகு கடுமையாகிவிட்டது. குழந்தையைத் தனது ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை செய்வதே நல்லது என்று டாக்டர் கருதினார். அதன்படியே மணி அங்குச் சேர்க்கப்பட்டான். அவனைக் கவனித்து வந்த