பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் எனும் புதிர் & 94 பார்க்கும். சிரித்துக்கொண்டிருக்கிற பொம்மை படுக்கப் போட்ட உடனே கண்ணை மூடிக்கொண்டு அழும். நீயே பாரேன், பாலு" என்று உணர்ச்சியோடு சொன்னான் மணி. “என்னாலே பார்க்கமுடியாதே, மணி” என்று பாலு தினக் குரலில் சொன்னது மணியின் இதயத்தைத் தொட்டது. பாலுவின் முகத்தை இரக்கத்துடன் பார்த்தப இருந்தான் மணி. பாலுவுக்குக் கண் தெரியாது. இரண்டு இரண்டரை வயசுவரை பார்வை பெற்றிருந்த கண்கள், திடீரென்று வந்த ஒரு வலிப்பு நோயின் காரணமாக, அந்தச் சக்தியை இழந்துவிட்டன. மீண்டும் அக்குழந்தை பார்வையைப் பெற முடியவில்லை. - ‘மணி!" என்று மெதுவாக அழைத்தான் பாலு. "ஜாங் ” "அந்தப் பொம்மை வந்ததும்." அவன் தயங்கினான். "சொல்லு பாலு!” "அதை என்னிடம் கொஞ்ச நேரம் தருவியா, மணி? நான் அதைத் தொட்டுத் தடவிப் பார்த்துவிட்டு உன்னிடம் தந்துவிடுவேன்.” "ஒ, தர்ரேன் பாலு" என்றான் மணி. - அதன் பிறகும் பாலு பொம்மையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். அவனிடம் பொம்மைப் பாப்பாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் மணி அலுப்படையவு மில்லை. பொம்மையை எதிர்பார்க்கும் உற்சாக ஜுரம் இரண்டு குழந்தைகளையும் பற்றி ஆட்டி வைத்தது. மறுநாள் கைலாசம் பொம்மையைக் கொண்டு வந்து மணியிடம் கொடுத்தபோது அந்தச் சிறு உருவம் பூரண ஆனந்தம் என்கிற பண்பின் பொருளாக மாறி நின்றது. பொம்மையைக் கொஞ்சி மகிழ்ந்தது.