பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 • | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | எல்லோரும் மகிழ்வு பொங்கி வழியும் முகத்தினராக நின்றார்கள். மணி "ஏய் பாலு!" என்று கூவிக்கொண்டு அவன் பக்கம் திரும்பினான். அடுத்த படுக்கையில் ஏக்கமும் துயரமுமாக அமர்ந்திருந்த குழந்தையின் தோற்றம் மோன பாஷையில் என்னதான் உணர்த்தியிருக்குமோ? “பாலு, இந்தா பொம்மை!” என்று அவசரமாக நீட்டினான். டாக்டர் அதை வாங்கி பாலுவிடம் கொடுத்தார். அதை இரு கைகளாலும் பற்றிய குழந்தையின் முகத்தில் மெது மெதுவாக, பின் வேகமாக சந்தோஷம் பரவி நிலைத்தது. அடிவானத்திற்கப்பால் எழுந்து வருகின்ற சூரியனின் செவ்வொளி கீழ் திசையில் கொஞ்சம் கொஞ்ச மாகப் பரவிப் பின் வெள்ளம்போல் பாய்ந்து விடுகிற தன்மையில் இருந்தது. அவனுடைய உள்ளத்திலே குழியிட்ட ஆனந்தம் உடலின் சகல அங்கங்களிலும் பொங்கிப் பாய்ந்த வகை. அவன் பொம்மையைத் தொட்டும் தடவியும் தழுவியும் முகத்தோடு சேர்த்தும் மோந்தும்-தனக்கென உரிய தனி முறையில்-ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான். அதைப் படுக்கவைத்ததும் எழுந்த அழுகை ஒலியைக் கேட்டு அவன் கைகொட்டிக் கலகலவெனச் சிரித்தான். அதுபோல் அவன் என்றுமே குதூகலம் அடைந்தது கிடையாது என்று டாக்டர் சொன்னார். அவனையும் அவனது செயல் களையும் குது கலிப்பையும் கவனித்து மன நிறைவுடன் இருந்த மணியின் உள்ளத்திலே என்ன ஒளி மின் வெட்டியதோ! எத்தகைய சக்தி அலைவீசி அதிர்ச்சி தந்ததோ! பாலு, பாலு என்று கத்தினான் அவன். "என்ன மணி, உன் பொம்மை வேணுமா?” என்று ஏமாற்றமும் சோகமும் புரளும் குரலில் கேட்டான் பாலு. "இல்லை, பால. அங்கப் பொம்மையை நீயேவைத்துக்