பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவு ஆச்சிக்கு அந்த ஊரில் ஏகப்பட்ட மதிப்பு இருந்தது. ஆவு ஆச்சி என்பதே அந்த ஊர்க்காரர்கள் அன்பாக இட்ட பெயர்தான். அவளது முழுப் பெயர் ஆவுடையம்மாள். வீட்டில் உள்ளவர்களும் உறவினரும் ஆவு! ஆவு!" என்று செல்லமாக அழைத்து வந்ததனால், அதுவே ஊர் முழுவதுக்கும் பொதுவான பெயராகி விட்டது. ஆச்சி என்பது மரியாதையினால் சூட்டப்பட்ட கெளரவச் சொல். ஆகவே, ஆவுடையம்மாள் "ஆவு ஆச்சி ஆகிவிட்டாள். ஆவு ஆச்சி என்றவுடன், அவள் கிழவியோ என்னவோ என்று எண்ண வேண்டாம். அவளுக்கு வயசு, அதிகம் போனால், முப்பத்தைந்து தான் இருக்கும். கணவன் இறந்து பல வருஷங்கள் ஆகிவிட்டதால் அவள் தோற்றத்திலும் நடை உடைகளிலும் சுயேச்சையான போக்கு, சுதந்திரப் பண்பு என்கிறார்களே ಅಥ್ರ பொலிவுடன் விளங்கியது. 'தாலி அறுத்துவிட்டால், தாசில் உத்தியோகம் வந்தது மாதிரி என்பாள் ஆச்சி. அந்தக் காலத்து அம்மையார் களுக்கு தாசில் உத்தியோகம் தான் மிக உயர்ந்த பாக்கியமாகத் தோன்றியது. ... " - - - ஆச்சி அப்படிச் சொல்லும் போது, இஷ்டம் போல் ஊர்க்ற்றி, கெட்டுக் குட்டிச்சுவராக முடியும் என் எண்ணத்தோடு பேசவில்லை. குடும்ப வாழ்க்கை: கணவனுக்கு அடங்கி நடத்தல், குடும்ப கெளரவம் கெடாமல் அஞ்சி ஒடுங்கி அடக்க ஒடுக்கமாக வாழ்வது