பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#62 வல்லிக்கண்ணன்

ஆனால் அனைத்து மாற்றங்களும் வளர்ச்சித் திக்கில் செல்வதில்லை என்பதை வாழ்க்கையும் மனித இயல்புகளும் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.

குடும்பம், குழந்தைப் பேறு, ஆண்பெண் உறவுகள் பற்றிய சிந்தனைக் குழப்பங்களும் உரிமைக்குரல்களும் சமூக நிலைகளை கலங்கலாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆழ்ந்த சிந்தனைகளும் அனுபவங்களினால் பட்டுத்தேறலும் காலமும் தான் தெளிவு ஏற்படுத்த வேண்டும். 4.

அன்பு

N. . ජී.

ஏ. தர்மராஜ் (த. ராசு)

20-70–93

அன்பு நண்ப,

வணக்கம்,

உங்கள் 16ம் தேதிக் கடிதம் நேற்று வந்தது. இடைக்காலத்தில் உங்கள் முகவரியில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை தெரிந்துகொண்டேன். அடிக்கடி வீடு மாற்றுவது சிரமமான காரியம் தான். என்றாலும், சில சிரமங்களை வாழ்க்கையில் விரும்பியோ விரும்பாமலோ எதிர்கொள்ளத்தான். வேண்டியிருக்கிறது.

நான் நலம். சென்னையில் தான். வெளியூர் போகிற எண்ணம் இப்போதைக்கு இல்லை மழை தொடர்ந்து அருள்புரிந்து கொண்டிருக்கிறது. அதனாலும் சங்கடங்கள் தான்.

மழை பெய்யாவிட்டாலும் சங்கடம் தான். காலம் ஒடுகிறது. இன்னும் ஆறு வருடங்கள் இரண்டு மாதங்களில் 2000 என்பதை எட்டிவிடலாம். நம்முடன் பழகிய நூற்றாண்டு போய்விடும்! ஊரும் உலகமும் வழக்கம் போல் தான் இருக்கும் - மனிதர்களின் நோக்கும் போக்கும் மாறாமல் இருப்பதால்.

அன்பு

!ெ. கி.