பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 臧

எழுதுகிற ஸிராசிக் பார்க் படம் பார்த்தீர்களா? அற்புதமான திகில் அனுபவமாகத் தான் இருக்கும் அந்தப் படத்தைப் பார்ப்பது.

'காஞ்சனை’ என்றொரு சினிமா சஞ்சிகை தயாராகி வருவதும் பாராட்டவும் வரவேற்கவும்படவேண்டிய நற்செயல்தான்.

'காஞ்சனை பதிப்பகம் பிச்சுமணி.கைவல்யத்தின் கவிதை பற்றிய நூலை வெளியிட்டிருப்பது துணிச்சலான காரியம் தான். புத்தகம் நன்கு தயாரிக்கப்பட்டிருக்கிறது.

கவிதை பற்றி இப்படி மேதாவித்தனமாக சர்ச்சை செய்வதன் மூலம் ஒரு நபருக்குக் கூட கவிதை பற்றிய தெளிவோ, ரசனையோ, ஈடுபாடோ உண்டாக்கிவிட முடியாது.

கவிதைகளையும் இலக்கியங்களையும் பற்றி பெரும் பேச்சு பேசுகிறவர்களும், ஆழ்ந்த-சீரிய-இஸ்ம் சார்ந்த விமர்சனங்கள் எழுதுகிறவர்களும் அவரவர் மேதமையை, அறிவுப் பிரகாசத்தை, வாக்குவன்மையை, ஆய்ந்து சொல்லும் ஆற்றலை வெளிப்படுத்த ஆசைப்படுகிறார்களே தவிர, கவிதையை நல்இலக்கியத்தை சாமான்யனும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு விளக்குகிறார்களில்லை. விஷயத்தை குழப்புகிறார்கள் என்று சொல்லவேண்டும்.

பிச்சுமணி கைவல்யத்தின் கவிதை விளக்கச் சொற்பொழிவும் அப்படிப்பட்டது தான்.

உண்மையில், கவிதையை அது என்ன என்று இதுவரை எவரும் சரியானபடி விளக்கியதில்லை. விளக்கமுடிவதில்லை. அவனவனே படித்துப் புரிந்து கொள்ளவேண்டியது தான். கவிதையை உணரும் பக்குவம் கவிதைகளை ஈடுபாட்டுடன் படித்துப் படித்துப் பெறவேண்டிய ஒன்று. இத்தகைய மேதாவித்தனமான வாதங்களையும் விமர்சனங்களையும் படித்துத் தெரிந்துகொள்ளக் கூடிய விஷயமல்ல

۔ تي إثيلي

அன்பு

డ. శ్రీ,

12-6-94

அன்பு மிக்க ரீதர், வணக்கம். 10ம் தேதி காலை நலமாக சென்னை வந்து சேர்ந்தேன். 18 மணி நேரம் ரயில் வண்டியில் உட்கார்ந்தபடி வருவது