பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் joy

க. ராசேந்திரன் (சின்னஞ்சிறு கோபுத்

- Z8:5ޤުޘުس 7~ޕޫ

பிரிய நண்பு,

வணக்கம். உங்கள் 12-7-85 கடிதம். மகிழ்ச்சி.

வடுக விருட்சியூர் அமுதாவின் கடிதங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது சந்தோஷம் தருகிறது. பல பத்திரிகைகளும் அதை நல்ல முறையில் விமர்சித்திருப்பதும் மகிழ்ச்சிக்கு உரிய விஷயம் தான். தீபம்’ ஆகஸ்ட் இதழில் மதிப்புரை, வரலாம்.

கும்பகோணத்தில் நீங்கள் நண்பர் கரிச்சான்குஞ்சுவை சந்தித்துப் பேசியது அறிந்தேன். உங்கள் கடிதம் மூலம் தான். அவர் சிரமமான வாழ்க்கை நடத்த நேர்ந்திருப்பது பற்றி அவ்வப்போது தகவல்கள் கிடைக்கின்றன.

கரிச்சான்குஞ்சு திறமையுள்ள நல்ல எழுத்தாளர். நல்ல சிறுகதைகள் பல எழுதியிருக்கிறார். அவருடைய நாவல் பசித்த மானுடம் அருமையான படைப்பு. அது இங்கு பத்திரிகைகளாலும் எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் உரிய முறையில் கவனிக்கப்படவே இல்லை. இது வேதனைக்கு உரியது.

தமிழ்நாட்டில் பதிப்பகத் துறைமட்டுமல்ல. சகல துறைகளுமே மோசமாகத் தான் இருக்கின்றன. எந்தத்துறையிலும் உண்மையான திறமையும் உழைப்பும் உரிய கவனிப்பையும், பாராட்டுதலையும் பெற முடிவதில்லை. .

'அன்னம் விடு தூது கடைசி இதழ் இம்மாதம் வந்தது. உங்களுக்கும் பிரதி வந்திருக்கலாம் அது ஒரு சிறப்பு இதழாகவே அமைந்திருக்கிறது.

அ.வி. தூது நல்ல பத்திரிகை. தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும். தமிழ் பத்திரிகை உலக வாசகர்களின் ருசி எப்படி எப்படியோ இருக்கிறது. அன்னம் போன்ற தரமான பத்திரிகையை அவர்கள் வாங்கத் தயாராக இல்லை.

அடுத்து, ஏஜண்டுகள். இவர்கள் பெரும் அளவில் விற்கிற வணிகப் பத்திரிகைகளுக்குப் பணம் அனுப்பி விடுவார்கள். பாக்கி வைக்க மாட்டார்கள். ஆனால், சிறு பத்திரிகைகளுக்கு, பத்திரிகை விற்ற பணத்தை மாதாமாதம் அனுப்பிவைக்க இவர்களுக்குக் கைவராது. மனசும் இராது. இவர்களை நம்பித்தான் பத்திரிகைகள் வரவேண்டியிருக்கிறது.