பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கள் கடிதங்கள் யாவுமே பொக்கிஷங்கள். அறிவுரை கூறும் வழிமுறை கூறும் வாழ்வு இத்தகையது தான் கவலைப்படாதே என ஆறுதல் கூறும்.

எனது பாக்கியம்தான் தங்களை உறவாகப் பெற்றிருப்பது. தங்கள் ஒவ்வொரு கடிதத்தையும் படிக்க எடுக்கும் போது ஆர்வம், படிக்கும்போது இதம், படித்த பின்பு இப்படி இருக்க வேண்டும் என்று மனதுள் ஒர் தீர்மானத்தைத் துண்டும் வண்ணமாகவே இருக்கும்.

தொடர்ந்து கடிதங்களை பொக்கிஷமாய் அனுப்பித்தரும் தங்களுக்கு திருப்பித் திருப்பி நன்றியைத்தான் கூறவேண்டும். எனக்கு மட்டுமின்றி பல நண்பர்களுக்கும் தாங்கள் எழுதும் கடிதங்கள் அவர்களை ஊக்குவிப்பதாய் உறமேற்றுவதாய், ஆறுதல் தருவதாய் வழிகாட்டுவதாய், இப்படி அவர்கள் தங்களுக்கு எழுதும் பதில்கள் மூலம் அறிந்து தங்கள் கடிதங்கள் பற்றிய எனது கருத்து சரிதான் என்றும் உணர்கிறேன்

இப்படி எல்லாருக்கும் கடிதம் எழுதி (அந்தக் கடிதம் அவர்களுக்கு பயனுள்ளவாயாகவே அமைத்து எழுதி) ஆனந்தப்படுத்தி தாங்களும் ஆனந்தப் படுபவர் தென் இந்தியாவில் தாங்கள் ஒருவர்தான் இருக்கக்கூடும் (வட இந்திய மற்றும் பிற பகுதியில் இப்படி கடிதங்கள் எழுதுபவர்கள் பற்றி எனக்கு ஏதும் ஞானம் இல்லை)

இது தங்கள் நிலையில் தாங்கள் புரியும் ஒரு தொண்டு என்று கூட்க் கூறுவேன். கடிதம் பெறுவோர் பதில் போடாவிடிலும் தொடர்ந்து அவர்களுக்கு கடிதம் போடும் இந்த விசேஷ குணம் யாருக்கு வரும்? நான் கடிதம் போட்டேன். அவன் பதிலே போடவில்லை. பிறகு இனி எதற்கு நான் கடிதம் போட வேண்டும்? என்றுதான் ஒரு சாதாரணன் நினைப்பான். ஒரு கர்ம யோகமாக இதைச் செய்கிறீர்கள். இது உங்கள் ஒருவரால் தான் கூடும்.

அண்ணன் வல்லிக்கண்ணன் பற்றி, அவர்தம் எளிய வாழ்வுபற்றி, இலக்கியத்திற்கு தம்மையே அற்பணித்துக் கொண்டது பற்றி யாவருக்கும் தெரியும். இப்படி தம் நண்பர்களுக்கு அவர் கடிதங்கள் எழுதி சேவை செய்வது பற்றி மிகச் சிலருக்கே தெரியும் இதுபற்றி நான் நிறைய்யவே எழுத விரும்புகிறேன்.

"வல்லிக்கண்ணன் கடிதங்கள் பற்றி அவருக்கே எழுதிய கடிதம்" இது இது முற்றானதல்ல. இன்னும் நிறைய்ய எழுதவேண்டியுள்ளது. அவற்றை பின்னால், தொடர்ந்து எழுதுவேன்.