பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}3 வல்லிக்கண்ணன்

பூம்புகார் பிரசுரம், மணிவாசகர் நூலகம் இரண்டிலுமிருந்து உங்களுக்கு பதில் வந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

புது டில்லியில் தலைநகரில் தமிழர்கள்” என்று ஒரு மாதப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சும்மா தகவல் பத்திரிகை. தலைநகரில் வசிக்கிற பிரமுகர்கள், நடைபெறுகிற நிகழ்ச்சிகள் பற்றிய விஷயங்களை வெளியிடுகிறது. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

"மீட்சி பிரம்மராஜன் (கல்லூரிப் பேராசிரியர்) முயற்சியால் வந்தது. அவர்தான் எவ்வளவு நஷ்டப்படுவார்? புத்தகங்கள் பிரசுரிப்பதில் அவர் கவனம் திரும்பிவிட்டது என்று தோன்றுகிறது. உங்கள் பக்கம் மழை உண்டா? சென்னையில் மழை என்று சொல்லும்படியாக பெரியதாக எதுவும் இல்லை. பொசுபொசு துற்றல் தினம் தண்ணீர் தெளித்துவிட்டுப் போகிறது.

அன்பு

3. టి.

இரா. நாகசுந்தரம்

சென்னை. ፲፪-፲፰0-93

அன்பு நண்ப,

வணக்கம். உங்கள் கடிதமும், 'சங்கு கதைத்தொகுப்பும் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி.

புத்தகத்துக்கு நன்றி.

பரந்துபட்ட வாழ்க்கை அனுபவங்கள் சித்திக்கப் பெற்ற நீங்கள். அவ்வனுபவங்களில் சிலவற்றையும், சில அனுபவங்கள் உங்களி: ஏற்படுத்திய மனப்பதிவுகளையும் எழுத்தில், சிறுகதை வடிவத்தில், பதிவு செய்திருப்பது நல்ல காரியம். இவை வாழ்க்கையையும் மனிதர்களையும் மேலும் கொஞ்சம் புரிந்துகொள்வதற்கு உதவக்கூடும்.