பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靴0 வல்லிக்கண்ணன்

ராஜவல்லிபுரம்

ந. க. துறைவன் 24-7-90

அன்பு மிக்க துறைவன், வணக்கம்.

உங்கள் 15-7-90 கடிதம் கண்டு மகிழ்ந்தேன். வேலூர் சிற்றிதழ்கள் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றதை அறிய சந்தோஷம். நான் சென்னையை விட்டு வந்து ஒரு மாதம் ஆகிறது. 7ம் தேதி ராஜபாளையம் போனதுக்குப் பிறகு, 14, 15ல் நான், தி.க.சி, தோப்பில் முகம்மது மீரான் மூவரும் திருச்செந்தூர் போனோம். அங்குள்ள இளம் எழுத்தாளர்களை கண்டு பேச. பிறகு அருகில் உள்ள ஆதுமுகநேரி போய் வந்தோம். இந்த ஞாயிறு (22) பாப்பாங்குளம் என்ற கிராமத்துக்கு தி.க.சி.யுடன் போய்வந்தேன். நாட்கள் சந்தோஷமாகக் கழிகின்றன. தி.க.சி.க்கும் எனக்கும் 1941 ஜூன் மாதம் நட்பு ஏற்பட்டது. ஆகவே இப்ப ஐம்பதாவது வருடம் நடக்கிறது. பான்விழா ஆண்டு. 1991 ஜுனுடன் முடிவுறும். பொன்விழா ஆண்டில் நாங்கள் இருவரும் திருநெல்வேலி வட்டாரத்தில் சுற்றுலா செய்ய நேர்ந்திருப்பதே எங்கள் நட்பின் பொன்விழாவை இனிது காண்டாடுவது போல் தான். நாங்கள் நலம். நீங்களும் மனைவியும் மக்களும் நலம்தானே?

s

as

"τ.

var

அன்பு

ఢ. శ్రీ.

இளசை அருணா

ராஜவல்லிபுரம். 29-??-7?

- يجم -- ما عدي مجم-. அகு:ை இன்ட்,

வணக்கம். உங்கள் கடிதம். திரு. ஆ. குருசாமி அவர்களை அறிமுகம் செய்திருப்பதற்காக நன்றி. மகிழ்ச்சி.

வருஷத்துக்கு ஒரு தடவை, சென்னையில் ரயிலேறினால் தாழையூத்தில் வந்த இறங்குவது - அப்புறம் வேறு எங்கும் போவது இல்லை என்பதை ஒரு கட்டாய வழக்கம் ஆக்கிவிட்டது பொருளாதாரம். ஒவ்வொரு தடவையும் தென்காசி, மதுரை, இடைசெவல், ராஜபாளையம், ரீவில்லிப்புத்துார் என்று வருமாறு அங்கங்கே உள்ள நண்பர்கள் அன்போடு அழைப்பதும், நான் போக இயலாது இருப்பதும் ஒரு கால நியதி ஆகவே வளர்ந்து வருகிறது. இம்முறை என்னை எப்படியும் தங்கள் ஊருக்கு வரவழைத்து, தங்கள் அதிதியாக உபசரிக்க வேண்டும் என்ற ஆசை மிகுதியால்,