பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் i

அக்டோபரில் ராஜபாளையம் நண்பர்களும், நவம்பரில் ப்புத்துர் நண்பர்களும், ஏதோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, பணம் அனுப்பி வைத்தார்கள். போனேன். சில தினங்கள் தங்கி.ே வந்தேன்.

மற்றப்படி, நான் பிரசங்கியும் அல்ல. அச்சடித்த நிரல்கள். மாலை மரியாதைகள், வரவேற்புரைகள் வேண்டும் என எதிர்பார்ப்பவனும் இல்லை.

நீங்களும் நண்பர் குருசாமியும் அன்போடு அழைக்கிறீர்கள். ஒட்டப்பிடாரம் வந்து, இரண்டு மூன்று நாட்கள் தங்கித் திரும்புவதில் எனக்குச் சிரமம் ஒன்றும் இல்லை தான். ஆனால் வசதி இல்லை. என்று நான் போன கடிதத்திலேயே குறிப்பிட்டது, பொருளாதார வசதியைத் தான். சில சமயங்களில், பக்கத்தில் உள்ள டவுனுக்கும், ஜங்ஷனுக்கும், அல்லது பாளையங்கோட்டைக்கு, போய்வரவே பைசாக்கள் இல்லாத வறட்சி நிலை நீடிக்கும். இந்நிலையில் வேறெங்கும் பயணம் போக ரூபாய்களை நான் எங்கே புரட்டுவது!

இதுதான் விஷயம். நலம். நாடுவதும் அதுவே.

A f' بر پایه శ్రీ .

சென்னை

تمي يتم سترة. يع

அன்பு மிக்க நண்ப,

வணக்கம். எட்டயபுரம் (மகாகவி பாரதி நூற்றாண்டு விழா) மாதர் கருத்தரங்கு சம்பந்தமான கடிதமும் அறிக்கைகளும் এrরুরী -42-32} அன்று கிடைத்தன. அதனால் வாழ்த்து அனுப்ப இயலவில்லை.

நூற்றாண்டு ஆரம்பத்தில் 100 கவிஞர்களை எட்டயபுரத்தில் கூட்டி கவிதை வேள்வி நடத்தியது போல, நூற்றாண்டு விழா இறுதிக்கட்டத்தில் 100 மகளிர் எட்டயபுரத்தில் கூடவும், ஊர்வலம் வரவும், கருத்தரங்கு நடத்தவும் ஏற்பாடு செய்தது புதுமையானது: பாராட்டுதலுக்கு உரியது. வரலாற்றுப் புகழ் பெற வேண்டியது. ரொம்ப சந்தோஷம்.