பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 133

வெற்றிகரமாகவும் செய்து முடித்திருக்கிறீர்கள். இது பாராட்டப்பட வேண்டிய சாதனையேதான். எனது வாழ்த்துக்கள்.

ஒகோ என்று மணிக்கொடியை ஒரே அடியாகப் புகழ்ந்து, மணிக்கொடிக்கு கோபுரம் கட்டும் முயற்சியில் ஈடுபடாது, காலத்தோடு ஒட்டிய விமர்சன நோக்குடன் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். சிவத்தம்பி, மார்க்ஸ், கனகசபாபதி ஆகியோர்.

சிவத்தம்பி கட்டுரையில் அச்சுப் பிழைகள் நிறைய. இவை விஷயம் அறியாத (பிற்கால) ஆய்வாளர்களுக்கு நிச்சயம் குழப்பம் ஏற்படுத்தக் கூடியவை. மணிக்கொடி மூன்றாவது கட்ட ஆசிரியர் ப.ரா. (ப. ராமஸ்வாமி). இக்கட்டுரையில் வ.ரா. என்று அச்சாகியிருக்கிறது. டி.கே.சிதம்பரநாத முதலியார், டி.கே சிரம்பரநாத செட்டியார் ஆகியிருக்கிறார். வருடங்கள் தவறாக அச்சாகியிருக்கின்றன.

'மணிக்கொடி முதல்கட்ட இதழ்களை நான் கூட வரிசை தவறாது பார்த்தது கிடையாது. மார்க்ஸ் அவற்றை ஆராய்ந்து தொகுத்து கொடுத்திருக்கிறார். இதன் மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ளமுடிந்தது.

கனகசபாபதி தீவிர விமர்சகராகும் உற்சாகத்தில் என்னென்னவோ பேசிவருகிறார்; எதுஎதையோ கண்டுபிடிப்புகள் என்று எழுதுகிறார். இக்கட்டுரையிலும் இத்தன்மை மேலோங்கி நிற்கிறது.

எம்.வி.வி. கட்டுரை மூலம் அவருடைய ஆரம்பகால அனுபவங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. கரிச்சான்குஞ்சு கட்டுரை கு.ப.ரா. பற்றிய அவர் உணர்ச்சிகளை நன்கு தெரிவிக்கிறது.

கு.ப.ரா. ஆற்றாமை கதைக்கு பொறாமை என்று தலைப்பு கொடுத்திருந்தார்; பிறகு ஆற்றாமை என்ற தலைப்புத் தோன்றவும், துறையூருக்கு தந்தி அடிக்கப்பட்டதாக ஞாபகம். தந்தி கொடுக்கப்பட்டதா என்பதை வல்லிக்கண்ணன் தான் சொல்லமுடியும் என்று கரிச்சான்குஞ்சு எழுதியிருக்கிறார்.

இவ்விஷயத்தை வனாகனா.வும் தெளிவு படுத்தமுடியாது. ஏனெனில் அந்த சந்தப்பத்தில் அவன் கிராம ஊழியனில் சேர்ந்திருக்கவில்லை. திருலோக சீதாராம் தான் பத்திரிகையை கவனித்துக் கொண்டிருந்தார். வ.க. சென்னையில் சக்திதாசன் - ராதாமணி நடத்தி வந்த நவசக்தி மாத இதழில் இருந்தான். 1944 பிப்ரவரி கடைசியில் தான் துறையூர் கிராம ஊழியனில் சேர்ந்தான். அதன் பிறகு ஒரு மாதத்தில் கு.ப.ரா. இறந்து போனார். மலருக்காகக் கும்பகோணம் நண்பர்கள் துறையூரில் தங்கியிருந்த போதும் வ.க.