பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 莓5

நடந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் இயற்கையின் விசித்திரத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

நீயும் உன் நண்பரும் கடலுக்குள் 2 கி.மீ. தூரம் நடந்துபோய் திரும்பியது புதுமையான அனுபவம் தான்.

அன்பு

ళ, ,

ம.ந. ராமசாமி

சென்னை

يلاني 9 س 2 سيع

பிரிய நண்ப,

வணக்கம். உங்கள் நவம்பர் 8 கடிதம் மூலம் உங்களுடைய பிரயான அனுபவங்களை அறிந்துகொண்டேன்.

'அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று பழங்காலத்து நாடக நோட்டீஸ்களில் அச்சிட்டிருப்பார்கள். அது மாதிரி, அடாது மழை பெய்த போதிலும் விடாது சுற்றுப் பயணத்தை நடத்தி முடித்து விட்டீர்கள். ரொம்ப சந்தோஷம்.

எட்டயபுரத்தில் காபி கிளப்' இல்லாதது பற்றி குறைப்பட்டிருந்தீர்கள். திருநெல்வேலி ஜில்லாவின் பெரும்பாலான கிராமங்களில் நல்ல காபி.கிளப் கிடையாது. பல ஊர்களில் டீக்கடை இருக்கும். அதுகூட தேவர் எவராவது நடத்துவதாக இருக்கும். சரிவர பெஞ்சு மேசை ஏற்பாடுகள் கூட இரா. ராஜவல்லிபுரத்திலும் அப்படித்தான். நம் போலியர் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிடமுடியாத சூழலாக இருக்கும்.

ஆனால், பாரதியார் இதுபோன்ற விஷயங்கள் பற்றி கவலைப்பட்டிருக்கமாட்டார். (மநரா)

-எந்த சாதிக்காரர் நடத்துகிற டீக்கடையாக இருந்தாலும் சரி. பாரதியார் கடையின் முன்னால் நின்று, டீ கிளாசை உயர்த்திப் பிடித்தபடி, தெருவில் போவோரெல்லாம் பார்க்கட்டுமென்று, 'பாண்டியா! டீ. அருமை. இன்னொரு டீ போடு இவருக்காக என்று வீதி வழியே போகிறவரையும் அழைத்து டீ குடிக்கும்படி செய்வார். தான் மட்டும் தனியாக நின்று டீ குடிப்பதில் அவருக்கு சந்தோஷம்