பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 177

உயர்ந்துவிட்டது - வளர்ந்து விட்டது - முன்னேறிவிட்டது என்று யார் யாரோ சொல்கிறார்களே!

கீதைக் கண்ணன் சொன்னான், மாதங்களில் நான் மார்கழி' என்று. அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்று இன்னமும் எனக்குப் புரியவில்லை. பீடை மாசம் மார்கழி என்று நம்மவர்கள் சொல்கிறார்கள். பனி, குளிர், நோய்கள் நிறைந்த மாதம் மார்கழி. விஷம் கொண்ட பாம்பை நல்ல பாம்பு என்று சொல்வது போல்தான், கண்ணன் சொன்னதும் இருக்குமோ என்னமோ!

அன்பு

భ, శ్రీ,

இல. இராமகிருஷ்ணன்

திருநெல்வேலி, #6-#2-32

அன்புமிக்க நண்ப, வணக்கம். 1982 முடியப் போகிறது. என்னை பொறுத்தமட்டில், ஒவ்வொரு வருடமும் முந்திய வருடத்தை விட, புதிய அனுபவங்கள் சித்திக்கவும், சந்தோஷங்கள் அதிகரிக்கவும் உதவுகிற காலகட்டமாகவே அமையும், 1982ம் அப்படித்தான்.

1982ன் முதல் பாதியில், எதிர்பார்த்திராத சந்தோஷங்கள் வந்து சேர்வதற்கு நீங்கன் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தீர்கள். அதற்காக என் நன்றி உரியது.

பாரதி நூற்றாண்டு என்று தடபுடலாக நாடு.நெடுகிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டு, நிறைவு விழாவும் நடத்தியாச்க. பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.

ஆனால், பாரதி கூறிய நல்ல கருத்துக்களை செயல்படுத்தும் முயற்சி இதுவரை நடந்ததில்லை. இனியும் நடைபெறாது.

பாரதி காலத்தில் தனிமனிதர் பண்புகளும் சமூக நிலைமைகளும் எப்படி இருந்தனவோ, அப்படியேதான் - அதைவிட மோசமாகக் கூட-இப்போதும் இருக்கின்றன. இனியும் விரைவில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடும் என்று சொல்வதற்கில்லை.

விழாக்கள், விசேஷங்கள் கொண்டாடுவதில் நம்மவர்க்கு எப்பவுமே உற்சாகம் அதிகம். அதுக்கு ஏகப்பட்ட சந்தர்ப்பங்கள்