பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் ##9

நீங்கள் என்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள். ஆகவே, என்னைப் பற்றி நானே சொல்லவேண்டியது அவசியம் ஆகிறது.

இயல்பால், நான் ஒதுங்கி வாழும் பிராணி, கூட்டங்கள், கல்யாணம் போன்ற விசேஷங்கள், மாநாடுகள் போன்ற திகழ்ச்சிகள் எதிலும் நான் கலந்துகொள்ள விரும்புவதில்லை. இவற்றை எல்லாம் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

சிலர் இயல்பினால், துடிப்பால், செயல்வேகத்தால் பலப்பலரை பின்பற்றி வரச்செய்யும் தலைமைப் பொறுப்பில் நாட்டமும் ஆற்றலும் உடையவர்களாக இருக்கிறார்கள். தனக்குப் பின் ஏகப்பட்ட (அல்லது ஒரு சில) வண்டிகளை இழுத்துச் செல்லும் என்ஜின் போல் திகழ்கிறார்கள்.

மிகப் பலர், ஒரு என்ஜினுக்குப் பின்னால் போகிற தொடர்வண்டிகள் போல் இயங்குகிறார்கள்.

நான் என்ஜின் சக்தி பெற்றிருக்கவில்லை. எந்த என்ஜினுக்கும் பின்னால் செல்ல ஆசைப்பட்டதும் இல்லை.

அதனால் தனியன் ஆகவே இருக்கிறேன்.

என்னிடம் படிந்துள்ள கோளாறான நோக்குகளும் போக்குகளுமே என்னை முன்னேற விடாதபடி, தடுத்த-இருந்த இடத்திலேயே இருக்கும்படி-செய்துவிட்டன என்று என் நலனில் அக்கறை கொண்ட நண்பர்கள் சொன்னது உண்டு.

அதற்காக வருத்தமோ கவலையே கொண்டதில்லை நான்.

பலப்பலருடைய போக்குகளையும் வாழ்க்கைமுறைகளையும் எண்ணங்களையும் ஆசைகளையும் அறிந்த நான், மற்றவர்களிடம் தொடர்பு கொண்டு, ஒத்துழைப்பு பெறமுடியும் என்று எண்ணுவதில்லை. அதிலும், எழுத்தாளர்கள் மனமுவந்து ஒத்துழைப் பார்கள் என்று சொல்வதற்கில்லை. துணைவர மாட்டார்கள் அவரவர் போக்கிலேயே போக ஆசைப்படுவார்கள் - என்று உறுதியாகச் சொல்லலாம்.

'உலக இதய ஒலிக்கு என்னால் இயன்ற அளவு கதை, கட்டுரை எழுதி அனுப்புவேன். அதுதான் என்னால் செய்யக் கூடியது.

அன்பு

{S. డి.