பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் #25

செய்த பூத உருவங்கள். கும்பல் மிகுதி. நன்கு தரிசனம் செய்ய முடிந்தது. “பண்டாக்கள் தொல்லை அதிகம் உண்டு. எங்களை அரசு ஆள் அழைத்துச் சென்றதால், அந்தப் புரோகிதர் தொந்தரவு பாதிக்கவில்லை.

இன்று இரவு ரயிலில் கல்கத்தா போகிறோம். நாங்கள் நலம் நேற்று மழை இல்லை. குளிர் உண்டு.

நீங்கள் எல்லோரும் சுகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நாட்கள் இனிமையாய் கழிந்தன. அதிகம் செலவு இல்லாமலே அருமையான இடங்களை பார்க்க முடிந்தது ஒரு நல்ல வாய்ப்பு.

அன்பு

ళ, 3.

2-3-79

அன்பு மிக்க அண்ணா,

வணக்கம். புவனேஸ்வரிலிருந்து நான் அனுப்பிய கடிதங்கள் கிடைத்திருக்கும்.

27-2-79 அன்று இரவு பூரிஜகந்நாத் எக்ஸ்பிரசில் புறப்பட்டு, 28 காலை 9 மணிக்கு ஹெளரா ஸ்டேஷன் அடைந்தோம். பிரயாணம் சவுகரியமாக அமைந்தது. ஸ்டேஷனுக்கு தமிழ் மன்றம் செக்ரடரி வந்திருந்தார். ஸ்டேஷனுக்கு வெளியே நீண்ட க்யூவில் நின்று தான் டாக்சி பிடிக்க வேண்டியிருந்தது. கல்கத்தா ஸதர்ன் அவன்யூவில் இருக்கிற நண்பர் E.V. மணி வீட்டுக்கு வந்து சேர்கையில் மணி 10 ஆகிவிட்டது. ஸ்டேஷனிலிருந்து 10கி.மீ தூரம்.

இங்கே சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் தான் நிகழ்ச்சி. ஆகவே அதுவரை சும்மா இருப்பது தான். கல்கத்தாவில் பகலில் வெயில்: இரவில் பனியும் குளிரும் கடுமை. -

ஸதர்ன் அவன்யூ பக்கத்தில் ரவீந்திர ஸரோபர் என்ற பெரிய ஏரி இருக்கிறது. ஒவ்வொரு கரையும் இரண்டு மைல் நீளம் குளுமையான மரங்கள், நடைபாதைகள், பெஞ்சுகள் நிறைந்த இடம். காலையிலும் மாலையிலும் ஏரியை சுற்றி நடக்கிறோம். தேகப்பயிற்சி செய்கிறவர்கள், நடப்பவர்கள், ஒடுகிறவர்கள், உட்கார்ந்திருப்பவர்கள் (ஆண்கள், பெண்கள்) தென்படுவர். ஏரியில் படகு விடுவோர் பலர். அழுக்குத் தண்ணிரில் குளிப்பவர்களும் துணி துவைப்போரும் உண்டு. மாலையில், காதல் பயிலும் ஜோடிகள் அதிகம்.