பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் $3?

காலை 7முதல் 7-15க்குள் ஒலிபரப்பு ஆகும். புகழேணி ஒலிபரப்பு நேரம் ஒவ்வொரு திங்களும் அதே வேளைதானாம். சுந்தரம் ஒவ்வொருவரிடமும் என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லி வைத்ததால், பலபேர் என்னை பார்க்க ஆசைப்பட்டார்கள். திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கம் வெள்ளியன்று இரவு ஒரு ஒட்டலில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்தது. 12 பேர் வந்தார்கள். கைத்தறி நீளத்துண்டு, Ballpoint பேனா, பவுண்டன் பேனா, சில புத்தகங்கள் தரப்பட்டன. கபிஸ்தலம் ஆசா என்பவர் கைத்தறி இரட்டை வேட்டி தந்தார். ஒட்டலில் டி.பன். மறுநாள், சோலைக் குயில்கள் சார்பில் ஒருவர் வீட்டில் சிறு கூட்டம். அவர் வீட்டிலேயே இரவு உணவும்-தங்கலும் ஒருநாள் - மா. ராசமாணிக்கனார் மகன் டாக்டர் கோவன் (அவர் மனைவி டாக்டர் அவ்வை) வீட்டில் சாப்பாடு. வேறொருவர் - PWD இளநிலை என்ஜீனியர், பட்டாபிராமன் பழைய பத்திரிகைகள் சேர்க்கிறார். 1830 முதல் உள்ள பத்திரிகைகள், மலேசியா பத்திரிகைகள் என்று மூவாயிரம் பத்திரிகைகள் வைத்திருக்கிறாராம். ஒரு இரவில் அவர் வீட்டில் உணவு. சோலைக் குயில்கள் நண்பர்கள் பஸ் செலவுக்கு என்று 35ரு தந்தார்கள். இளசை சுந்தரம் 55 தந்தார். ரேடியோ புகழேணிக்காக 100 ரூபாய் செக். இவை வரவு. திருச்சிக்கு வரும்போதெல்லாம் நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்ற அன்பு உபசரிப்புகள். நான் அவெர.கி. ரெட்டியாரை தேடிப் போய் பார்க்க விரும்பவில்லை. வீரம்மாளை, அவள் பணிநிலையங்களை, தேடிக் காண முயற்சி எடுக்கவுமில்லை. சுந்தரத்துடன் ஒருநாள் ஆண்பாவம் படம் பார்த்தேன். வழக்கமான மசாலாப் படம். ரேவதி இயல்பாக, மிக நன்றாக நடித்திருக்கிறாள்.

தாய் 27/4 இதழில் இரகுராமன் எழுதி வெளியிட்டுள்ள எனது அபிப்ராயங்கள் பார்த்தேன். திருச்சியில் அநேகர் அதைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். தேவியில் என் கதை வந்துவிட்டதையும் பார்த்தேன்.

அன்பு

3. శ్రీ,

ராஜவல்லிபுரம் 77-9-86

அன்பு மிக்க அண்ணா,

வணக்கம்.

ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும் என்றபடி ஆகிவிட்டது எனது சென்னைப் பயணம். இம்மாதம் புறப்பட இயலாாதபடி ஒரு குறுக்கீடு. ராஜபாளையம் அருகே சோழபுரம் என்ற