பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

பூத்துக் குலுங்கும் ரோஜா ச் செடிகளைப் பார்க்கும் போதெல்லாம், சென்னையில் ரோஜாச் செடி வாங்க வேண்டும் என்று தீர்மானித்தும், இதுவரை வாங்காமலே நாளோட்டி விட்டது மனசில் உறுத்துகிறது.

சந்தோஷங்களுக்குப் பஞ்சமே இல்லை. சந்தோஷமாக இருங்கள்.

அன்பு

ఢ. ఆశ.

சென்னை

3?-12-82

அன்புள்ள சண்முகவடிவு,

நேற்று அப்பா பேருக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். கிடைத்திருக்கும். நேற்று ராத்திரி நாங்கள் மூன்று பேர் 'அம்மா படம் பார்த்தோம். ஒரே அறுவை. அழுகைப் படம்.

படம் பார்த்ததைவிட, தியேட்டருக்கு சைக்கிள் பின்னால் உட்கார்ந்து போய் வந்த அனுபவம் இனிமையானது. அருமையான நிலவு. பெளர்ணமி இரவு. பனிக்குளிர். உலகமே மோகன அழகு பெற்று விளங்கும் நேரம். குளுமையான காட்சிகள். 2 மைல் தூரப் பயணம்.

சிதம்பரம் நடராஜனை பார்க்கவேண்டும் என்ற நினைப்பு எனக்கு இருந்ததில்லை. ஆனால் சிதம்பரம் நடராஜன் என்னை பார்க்க வேண்டும் என்று விருப்பம் கொண்டு, என்னை அவனுடைய இருப்பிடத்துக்கு வரும்படி செய்துவிட்டான். ஏகப்பட்ட நகைகள் அணிந்து, பெரிய தேருக்குள் ஊஞ்சலில் ஆட்டம் கொண்டிருந் தார்கள். அம்மன் தேர் மற்றும் மூன்று தேர்கள். பெரிய கோயில். கோயிலுக்குள் இரண்டு மணி நேரம் செலவு செய்தோம்.

பெரிய வீதிகளைக் கொண்ட பெரிய ஊர் சிதம்பரம். ஆனாலும், பல ஊர்களையும் பார்க்கிற போது, எல்லா ஊர்களும் ஒரே மாதிரி தான் என்று தோன்றும். ஒரே மாதிரியான தெருக்கள் - கடைகள்- வீடுகள் - போர்டுகள்-நோட்டீசுகள்-அசிங்கப் படுத்துதல்கள். -

எங்கும் மழை இல்லாததால், பயிரிட முடியாத நிலைமை. நிலக்கடலை பயிராகவில்லை. நெல் பயிராகவில்லை. இனி வரப்போகிற மாதங்கள் பயங்கர நிலைமைகளைத் தாங்கி நிற்கும். மின்சாரத் தட்டுப்பாடு வேறு.