பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ē வல்லிக்கண்ண்ன்

தரவில்லை. அவற்றை ஒரு தரம் - சிலவற்றை இரண்டு மூன்று டவைகள் படித்தாச்சு அவற்றைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை. நானே சொந்தப் பத்திரிகை நடத்தவும், சொந்தமாகப் புத்தக வெளியீட்டு நிறுவனம் நடத்தவும் வாய்ப்பும் வசதிகளும் இருந்திருக்குமானால், சேகரம் செய்து வைத்திருந்த புத்தகங்கள் ரொம்பவும் பயன்பட்டிருக்கும்.

எனக்குப் பிறகு இந்தப் புத்தகங்கள் என்ன ஆகும் இவற்றை என்ன செய்வது என்ற பிரச்னை என்னுள் எப்பவும் இருந்துகொண்டேயிருந்தது. சும்மா கொடுத்தால் கூட, யாரும் படிக்க மாட்டார்கள். இன்றைய மாணவர்களுக்கு - படித்துத் தேறியவர்களுக்கு - இவை பிடிக்கமாட்டா புரியவும் மாட்டா. இந்து கல்லூரிக்கு இலவசமாகக் கொடுக்கலாம். அங்கும் மாணவர்கள் எடுத்துப் படிக்கமாட்டார்கள். போன் வருடம் ஒரு பேராசிரியர் எதேச்சையாகச் சொன்னார்: கல்லூரிக்கு இனாமாக நல்ல புத்தகங்கள் கிடைத்தன. அவற்றை நன்கு பராமரிப்பார் இல்லை. வைத்துப் பாதுகாக்க அலமாரி கூட இல்லை. ஒரு அறையில் அப்படி குமிச்சு வச்சிருக்காங்க!. . யார் எவ்வளவு நல்ல புத்தகங்களைக் கொடுத்தாலும், அவற்றின் கதி இப்படித் தான் அமையும். கொடுக்கிறவன், அவனே போக்குவரத்துச் செலவு செய்து காலேஜில் கொண்டு சேர்ப்பது மட்டும் போதாது; அப் புத்தகங்களை வைத்துப் பாதுகாப்பதற்குத் தேவைப்படும் அலமாரிகளையும் அவனே கொடுக்கவேண்டும்!

இந்தச் சிரமம் எல்லாம் வேண்டாமே என்று காலமே என் பிரச்னையை தீர்த்துவிட்டது - கறையான்களை அனுப்பி புத்தகங்களை அழித்து ஒழித்து:

தமிழ் புத்தகங்கள் பெரும்பாலானவை பாழாய்ப்போனது என் மனசுக்கு ரொம்பவும் வருத்தம் தருகிறது. நல்லதல்ல புத்தகங்கள் - நிரந்தரமாகப் பயன்படக்கூடியவை - எல்லாம் போச்சு. பாரதியார் பாடல்கள், கதைகள், கட்டுரைகள், டி.கே.சி. நூல்கள், வ.ரா, புதுமைப்பித்தன், நான் எழுதியவை, நீல. பத்மநாபன் நாவல்கள் எல்லாம், ஆதவன் காகித மலர்கள், நாஞ்சில் நாடன் தலைகீழ் விகிதம்' - இப்படி பெரிய பெரிய புத்தகங்கள் எல்லாம் போய்விட்டன.

நாசமாய் போயின. அவ்வளவு தான். அதுக்காக வருத்தப்பட்டுப் பயன் இல்லை.

மனிதர்கள் செத்துப் போகிறார்கள். வெள்ளம் வந்து - எரிமலை வெடித்து ஊர்களே நாசமாகிவிடுகின்றன. மனிதர்களின் வெறிச்செயலால் லைபிரரிகள், பெரிய பெரிய கட்டிடங்கள்