பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் #47

படித்தது போதும் என்று ஏழாங்கிளாசோ டு படிப்பை நிறுத்தினார்கள் 1984ல். 1985ம் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார்கள். பாளையங்கோட்டையில் மாப்பிள்ளை வீடு என்று சுந்தரி சொன்னாள். இந்த ஊரில் வேணி என்று ஒரு பெண். 24 வயது இருக்கும். கார்காத்தார் தான். காது கேளாதாம். படித்துவிட்டு, டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வேலை பார்த்தாளாம். திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு மாற்றினார்கள். பிறகு வீட்டுக்குப் போகச் சொன்னார்கள். ஆட்குறைப்பு காரணம். வீட்டில் அம்மா தொணதொணப்பு. மகளுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. வேணி கெரசினாயிலை தன் மேலே ஊற்றி, தீ வைத்துக் கொண்டு செத்துப் போனாள். பாவம்:

அன்பு

←f. ē.

ராஜவல்லிபுரம் 27–2-86

அன்புமிக்க ராதா,

உனது 24-ம் தேதிக் கடிதம் நேற்று வந்தது. சந்தோஷம். நீ எல்லாப் பரீட்சைகளையும் நன்றாக எழுதியிருப்பதை அறிந்து மகிழ்கிறேன். சண்முகவடிவு டைப்ரைட்டிங் ஹையரில் கிளாசில்

o *. _ . م. ( ماء , r N هم و و ، و و مس ميم )T8 -. e - z = r * * به نه பாஸ் ஆகியிருப்பதை அநிய ரொம்ப சந்தோவும். பாராட்டுக்கள்.

தமிழ்ப் புத்தகங்களில் பழசும் புதுசுமாக ஏகப்பட்டவை நாசமாகிவிட்டன. பீரோவில் வருஷக் கணக்கில் பாதுகாப்பாக இருந்த புத்தகங்கள், பெரும்பாலானவை நாள்பட்டவையான போதிலும், இப்பவும் புதுசு போலவே தோற்றம் காட்டுகிறவை.

தப்பி உள்ள புத்தகங்களை வெளியே தான் வைக்க வேண்டியிருக்கிறது. ஒருநாள் இங்கே வந்த நண்பர் ராஜநாராயணன், ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து, புத்தகங்களை (1940,50களை சேர்ந்தவை) அப்படியே புதுசா வெச்சிருக்கேளே என்று வியந்து அதிசயித்துப் பாராட்டினார். பிரோ அவ்வளவு பத்திரமான-பாதுகாப்பான-இடமாகத்தான் இருந்தது இதுவரை.

நான் எழுதி வெளிவந்த புத்தகங்கள் எல்லாம் அழிந்து போயின என்று முன்பு எழுதியிருந்தேன். அப்படி நேரவில்லை. எஞ்சியவற்றை