பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 149

ராஜவல்லிபுரம் 15-3-86

அன்பு மிக்க ராதா,

நீங்கள் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

நேற்று (வெள்ளி) எம்.ஜி.ஆர். திருநெல்வேலிக்கு வந்தார். புதன் முதலே அதற்கான தடயுடல் ஏற்பாடுகள். சங்கர்நகர், கரையிருப்பு, தாராபுரம், தச்சநல்லூர் - இப்படி ஒவ்வொரு ஊரிலும் ரோட்டில் பத்தடிக்கு ஒரு ஆர்ச் என்று ஏகப்பட்ட பந்தல்கள். சிந்துபூந்துறை, ஜங்ஷன் நெடுகப் பெரியபெரிய பந்தல்கள். ஜங்ஷன் மேம்பாலத்திலி ருந்து டவுண் முடிய, நெருக்கமாக ஆர்ச்சுகள்; 20க்கும் மேற்பட்ட மிக உயரமான கோபுரங்கள் போன்ற அடுக்குப் பந்தல்கள். அவற்றில் எல்லாம் பல்பு அலங்காரங்கள், எல்லாவற்றிலும் ட்யூப் லைட்டுகள். 'வயல்காட்டுப் பள்ளிக்கூட மைதானத்தில் அரண்மனை மாதிரி ஒரு பந்தல், அதில்தான் நிகழ்ச்சி. நிகழ்ச்சியை நேரே பார்க்க முடியாதவர்களுக்கு வசதியாக, ரோடில் அங்கங்கே டெலிவிஷன் ஏற்பாடுகள். எங்கும் ரோடுகளின் இருபுறமும் சவுக்குக் கட்டைகள் வைத்துக் கட்டப்பட்ட வேலிகள். எல்லாம் சிறிது நேரம் கூத்துக்காக, புதன் இரவே விளக்குகள்-அலங்கார வெளிச்சங்கள்எரியவிடப்பட்டன. பார்ப்பதற்கு ஒரே ஒளிமயமாக இருந்திருக்கும். திருவிழாக் கோலமாக நான் பார்க்கவில்லை.

பேசமுடியாத ஒரு பொம்மை மந்திரி வந்து போவதற்கு இவ்வளவு வீண்செலவுகள், வீணடிப்புகள்! அவருக்கு தங்கவாள் பரிசுவேறு. எந்த நாட்டிலோ-ஸ்வீடனா? - தங்கள் மந்திரியும் தங்களைப் போலவே சகஜமாகப் பழகவேண்டும்; தடபுடல் ஆர்பாட்டங்கள் தேவையில்லை என்று மக்களும் மந்திரியும் கருதுகிறார்களாமே! மடப்பசங்க இந்த நாட்டுமக்கள் அவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பார்கள் எப்படி வீணத்தனங்களும் வெட்டிவேலைகளும் பணப் பாழாக்குதல்களும், மக்களுக்கு சிரமங்களும் ஏற்படுத்த முடியும் என்று!

இரண்டு நாட்கள் ஜங்ஷன்-டவுண் பஸ் போக்குவரத்து திணறித் திண்டாடியது. பாதைகளை மாற்றி ஒட்ட வேண்டியிருந்தது. தச்சநல்லூரிலிருந்து ஜங்ஷனை அடைய பஸ்கள் ஊர்ந்தும், ந்ெடுநேரம் காத்துக் கிடந்தும் அவதிப்பட வேண்டியதாயிற்று. அறிவு விழிப்பு பெற்றுவிட்டார்களாம் மக்கள்! எங்கே பெற்றிருக்கிறார்கள்?

அன்பு

tெ. க்,