பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jS3 வல்லிக்கண்ணன்

உடுமலைப்பேட்டை 25–3–36

அன்புள்ள ராதா,

நீங்கள் எல்லோரும் கடலோரக் கவிதைகள் பார்த்து ரசித்ததை அறிய சந்தோஷம். அந்தப் படம் இங்கு முன்னரே வந்து போய்விட்டதாம். ரொம்ப நாட்கள் ஓடவில்லையாம்.

அப்பா அனுப்பிய கடிதங்கள் கிடைத்தன. கடிதங்கள் மறுநாளே கிடைப்பதில்லை. மூன்றாம் நாள் தான் கிடைக்கின்றன.

நீங்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்வதை அறிந்து - இதுக்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்று எழுதவா, வருத்தப்படுகிறேன் என்று எழுதவா என்று தெரியவில்லை!

வாழ்க்கை திலைமைகள் அப்படி இருக்கின்றன. இருந்தபோதிலும், சந்தோஷமாக இருக்கமுடிகிறதே, அதுக்காக மகிழ்ச்சி அடையலாம்.

நான் செப்டம்பர் 5-ம் தேதி ராஜவல்லிபுரம் போவேன்.

14-ம் தேதி எழுத்தாளர் உறவு கூட்டம் மதுரையில், முதலில், புதுக்கோட்டையில் என்று தீர்மானிக்கப்பட்டது. இப்போது, புதுக்கோட்டையில் வேண்டாம்; மதுரையிலேயே கூடலாம் என்று தீர்மானம்,

அது முடிந்ததும், ராஜவல்லிபுரம் போய்விட்டு, செப்டம்பர் கடைசி வாரத்தில் சொன்னை வந்து சேர்வேன்.

ஆகஸ்ட் முடிவுடன், நான் சென்னையை விட்டு வந்து 7 மாதங்கள் ஆகும். இன்னும் இந்தப் பக்கத்திலேயே திரிந்து கொண்டிருப்பது சரியில்லைதான்!

நவராத்திரிக்கு முன்னதாக சென்னை வந்துவிடுவேன். தீபாவளி அக்டோபர் 31 இரவு-நவம்பர் 1-ம் தேதி காலையில்.

வாழ்க பண்டிகைகள்.

அன்பு