பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 望を書

சில பேர் தெரியாதவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதி அனுப்புவார்கள். திருநெல்வேலி டவுண் மேலரத வீதியில் ஜவுளிக்கடை வைத்திருக்கும் த.க. காந்திமதி நாதபிள்ளை என்பவரும் அப்படிப்பட்டவர்தான். புத்தங்கள் எழுதியுள்ள கவிஞர்கள் . புலவர்கள், ஆசிரியர்களுக்குக் கடிதங்கள் எழுதுவார். பாராட்டியும் வாழ்த்தியும். அவர்கள் எழுதுகிற பதில்களை வாங்கி, சேர்த்து வைத்து மகிழ்ந்து போவார். அவர் கடையில் வியாபாரம் கிடையாது. சும்மா உட்கார்ந்திருக்கிற போது எதையாவது எழுதிக் கொண்டிருப்பார். கவிதை என்று. அவர் எழுதுகிறவை கவிதையாகவும் இராது, செய்யுளாகவும் இராது. அவற்றை அவர் பத்திரிகைகளுக்கு அனுப்புவதுமில்லை.

பொழுதுபோக்கக் கடை உண்டு

விழுந்து கிடக்க வீடுண்டு

தொழுதுகும்பிடக் கோயில் உண்டு

அழுது புலம்பிட ஆச்சி உண்டு.

இது அவர் எழுதியுள்ள பாடல்களில் ஒன்று.

நீ பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்காக புத்தகம் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. பாராட்டுக்கள்.

திருநெல்வேலியில் நடிகை நதியாவுக்குக் கூட ரசிகர் மன்றம்' அமைத்திருக்கிறார்கள். நிலவே மலரே படம் வெளிவந்ததும் இந்த ரசிகர்கள் நதியாவை வாழ்த்தி நோட்டீஸ்கள் அடித்து ஒட்டி மகிழ்ந்து போனார்கள். நதியா அவர்களே, வாழ்க வளர்ந்து புகழ் பெறுக எனற தன்மையில் நதியாவை ஒரு தரம்கூட நேரில் பார்க்கிற வாய்ப்பும் கிடைக்காது இவர்களுக்கு இருந்தாலும் இப்படி ஒரு ஈடுபாடு:

அன்பு

భ్కి!. శ్రీ,

ராஜவல்லிபுரம் 7-5-86

அன்புள்ள ரேவதி,

எல்லாப் பரீட்சைகளையும் நன்றாக எழுதியிருப்பாய் என்று நம்புகிறேன்.