பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$62 வல்லிக்கன்னன்

4-ம் தேதி முதல் அக்கினிநட்சத்திரம் (சென்னையில் கத்திரி') ஆரம்பித்துவிட்டது. வெயில் கடுமை ஏறிக்கொண்டே போகிறது.

சினிமா பார்க்க விரைகிறவர்கள் ஆண்களும் பெண்களும் - அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. திருநெல்வேலியில் உயிரே உனக்காக என்ற நதியா படம் இன்னும் வெற்றிகரமாக ஒடுகிறது. ததியா மோகத்தைக் கண்ட மற்றுமொரு தியேட்டர்காரன் பூவே பூச்சூடவா படத்தை வரவழைத்திருக்கிறான். ஒரு வாரமாக அதுவும் போகிறது.

கமல் நடித்த நானும் ஒரு தொழிலாளி படம் வந்திருக்கிறது. கமல் ரசிகர் மன்றம்'கள் அதுக்காக ஆர்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். தியேட்டருக்கு முன்னால் 6 அடுக்குப் பந்தல். வரவேற்புப் போஸ்டர்கள். -

ஒவ்வொரு நடிகனுக்கும், ஒவ்வொரு ஊரிலும் அஞ்சாறு ரசிகர் மன்றங்கள். தனித்தனிப் பேர்களோடு. விக்ரம் கமல் ரசிகர் மன்றம்; பாரத் கமல் ரசிகர் மன்றம் - இப்படி.

மடச் சிகாமணிகளாக இருக்கிறார்கள் இளைஞர்கள்!

"மகராஜதகளில் கெளரி வீட்டில் சின்னஞ்சிறு கருநீலப்பூ பூக்கிற படர்செடி ஒன்று பார்த்தேன். அற்புதமான கறும்பூ, வாழ்க்கை முழுவதும், ஆகன் முழுவதும், அந்தப் பூவைப் பார்த்துக்கொண்டே *# εί, ώ. தியக்காரத்தனம் தான். ஆனால் என்ன இனிமையான பைத்தியக்காரத்தனமாக அது இருக்கும்? என்று கல்யாணி தி.க.சி. மகன் ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

அற்புதமான பூக்கள் அங்கங்கே தென்பட்டுக் கொண்டுதான் - பெயர் தெரியாத காட்டுச் செடிகள், பல அழகான,

அமைப்புள்ள பூக்களைக் காட்டிச் சிரிக்கின்றன.

பூக்கள் அருமையானவை. இனிமையானவை. கண்களுக்கு விருந்தாகி, மனசுக்கு இதம் அளிக்கக் கூடியவை.

மணம் இல்லாத பூக்கள் கூட, பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கின்றன. பொகெய்ன்வில்லாச் செடிகளின் பளிச்சிடும் பிங்க் நிறப் பூக்கள் பல இடங்களிலும். இந்த இனம் பூக்களில் பலரக வர்ணங்கள் இருக்கின்றன. பிங்க், குங்குமம் போன்ற செந்நிறம், ஆரஞ்சு, கலவையான ஒரு நிறம், வெள்ளை, மஞ்சள் மாதிரி.

வெள்ளை நிறப் பூக்கள் செடியில் மண்டிக் கிடந்தாலும் அழகாக இல்லை. பிங்க் நிறம் தான் ரொம்ப அழகு.

இந்த வட் டாரத்தில், சில்லறை தேவதைகள் (பேய்க்