பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் i53

கோயில்கள்) இருக்கிற இடமெல்லாம் கொடை தடப்பதும் சகஜம். அறுப்பு முடித்து நெல் கிடைக்கிற காலங்களில், கோயில்கொடைகளும் தடபுடல் படும். ஒவ்வொரு வெள்ளி, செவ்வாயும் எங்காவது கொடை இருந்துகொண்டே இருக்கும்.

கொடை என்றால், வில்லு கண்டிப்பாக உண்டு. ராத்திரி பூராவும் வில்லுப்பாட்டு நடக்கும். இப்போதெல்லாம் எலெக்ட்ரிக் லைட் அலங்காரங்கள் அதிகமாகிவிட்டன. ஒலிபெருக்கியின் கதறல்களும் உண்டு. செலவுக்கு எத்தனையோ வழிகள்! செலவு பண்ணுவதற்கு ஜனங்களுக்குப் பணம் எப்படியோ கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது:

இந்தக் கடிதத்தை இதுவரை எழுதி முடித்த போது, தபால்காரன் உனது 3-5-86 கடிதத்தைக் கொண்டு தந்தான். கப்பிரமணியன் கடிதமும் கிடைத்தது. (8-15 மணிக்குச்

தேவியில் வந்த பாராட்டுக் கடிதத்தை எழுதித் தெரிவித்ததற்காக தேங்க்ஸ்.

'குமுதம் இதழ் நேற்று வாங்கிப் பார்த்தேன். இமயப் பதிப்பகம் வீரராகவன் கு.ப.ரா. பற்றிய செய்தி அதில் வந்திருப்பதை மட்டும் தான் எழுதினார். புத்தகம் பற்றிய தகவலும், அட்டைத் தோற்றமும் வந்திருப்பது குமுதம் வாங்கிப் பார்த்ததும் தான் தெரிந்தது.

எனக்கு 2 புத்தகங்கள் அனுப்பிவைத்தார் வீரராகவன். அதிகப் பிரதிகள் ரிஜிஸ்டர் தபாலில் அனுப்புவதாக எழுதியிருக்கிறார். அரும்பு தபாலில் வந்து சேரவில்லை. இதை அப்பாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.

سياسي ?

சேர்கள், ஸ்டூல் எல்லாவற்றுக்கும் பெயிண்ட் அடித் விட்டதை அறிந்து மகிழ்கிறேன்.

§

w.

கேரம் போர்டு வாங்கியிருப்பதும் சந்தோஷத்துக்குரிய விஷயம் தான்.

உடுமலைப்பேட்டைக்கு எப்போது போவது என்று இன்னும் முடிவு பண்ணவில்லை.

பூரீவில்லிபுத்துரை அடுத்த ராமச்சந்திரபுரம் வீர வேலுசாமியும் குடும்பத்தினரும் என்னை அவர்கள் ஊருக்கு அழைத்திருக்கிறார்கள். பயணச் செலவுக்குப் பணம் அனுப்பியிருப்பதாக எழுதியிருக்கிறார். நாளை கிடைக்கலாம். சனியன்று நான் புறப்பட்டுப் போகலாம். திரும்பி வர ஒருவாரம் ஆகலாம்.

அன்பு