பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

గ్రడ్జి வல்லிக்கண்ணன்

71–6–86

அன்புள்ள ரேவதி, உன் கடிதம் சந்தோஷம் தந்தது. நீ என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதுவதே நல்லது. அதிர்ஷ்டம் இருந்து. எபீட் கிடைத்தால் நல்லதுதானே. முன்பு மோனகன் ஸ்கூலில் படித்தபோது, டீச்சர் ஒவ்வொருவரையும் மேலே நீ என்ன படிக்கப்போகிறாய் என்ன செய்ய விரும்புகிறாய் என்று கேட்டதாகவும் நீ டாக்டர் ஆக விரும்புவதாகச் சொன்னதும், அவள் சிறிது நேரம் மவுனமாகப் பார்த்துவிட்டு God Bless you என்று கூறியதாகவும் நீ தெரிவித்தது ஞாபகம் இருக்கிறது. உனக்கும் ஞாபகம் இருக்கும்.

அந்த God என்கிற கம்னாட்டிப் பையன் நீ விரும்பியபடி பாலி டெக்னிக்கில் இடம் கிடைப்பதற்கு அருள் புரியாது போனால் நீ ஆசைப்படுகிறபடி மெடிக்கல் காலேஜிலாவது இடம் கிடைக்கத் திருவருள் பாலிக்கிறானா என்று பார்க்கலாமே!

என்டரன்ஸ் எக்ஸாமுக்காக நீ படிக்க ஆரம்பித்திருப்பதை அறிய மகிழ்ச்சி.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போய் வர எண்ணியிருப்பதாக எழுதியிருந்தாய் இதுக்குள் நீ, ராதா, சங்கரா மூன்று பேரும் கபாலித்தடியனையும் கற்பகாம்பாள் என்கிற குட்டைத்தடிச்சியையும் பார்த்து வந்திருக்கலாம் என்று நினைக்கறேன்.

வாழ்க கடவுள்கள்! வளர்க கோயில்கள் சினிமா தியேட்டர்கள் மாதிரி

இங்கே காற்று பேய்த்தனமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. புழுதி, துளசியை எல்லாம் வீட்டுக்குள்ளே கொண்டு வந்து சேர்ந்து, தொல்லைதருகிறது.

நேற்று இரவு எதிர்பாராதவிதமாக மீனா குமாரியும் (குற்றாலம் பராசக்தி கல்லூரிப் பேராசிரியை) அவள் கணவன் கனகராஜூம் வந்தார்கள் வாறேன் - வாறேன் என்று பல மாதங்களாகச் சொல்லி இப்பதான் வசதிப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள உங்கள் அனைவரது நலனையும் விசாரித்தாள்.

அவள் ரொம்பவும் மெலிந்து காணப்படுகிறாள். இம்மாதம் 25ம் தேதி சென்னைக்கு ஒரு கல்யாணத்துக்காகப் போக இருப்பதாகவும், அப்போது அங்கே வீட்டுக்கு வந்து உங்கள் எல்லோரையும் பார்க்கப் போவதாகவும் (பார்த்து வருஷங்கள் பல ஆச்சு) அந்த அம்மாள்