பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళళ வல்லிக்கன்ன்ன்

எதிராஜ் காலேஜில் பி.எஸ்.ஸி. பிசிக்ஸ் இடம் கிடைக்க வேண்டும்; கிடைக்கும் என நம்புகிறேன்.

பரீட்சைகளில் மதிப்பெண்கள் பெறுவது திறமையைப் பொறுத்த விஷயம் இல்லை; படிப்பு அறிவு-பரீட்சை எழுதிய நேர்த்தி இவற்றைப் பொறுத்து அமைவதுமில்லை. பரீட்சைத் தாள்களைத் திருத்துகிற பேராசிரியர்களின் மூட் (மனநிலைகளைப் பொறுத்த விஷயம் என்று இருக்கிறது.

ஆகவே, நன்றாகப் படித்து நன்கு விடை எழுதியவர்கள் உரிய மார்க்குகள் பெறமுடியாமல் போவதும், திறமை குறைந்தவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று விடுவதும் சகஜமாகிவிட்டது. இதையும் அவரவர் அதிர்ஷ்டம் என்று சொல்வதிலும் தப்பு இல்லை.

கடவுள், கடவுள் நம்பிக்கை என்பது பெரிய விஷயம். உண்மையில், ஜனங்கள் நம்புகிறபடி-நம்புகிற உருவங்களில் - கடவுள் எதுவும் கிடையாது. பரமசிவன், பார்வதி, விநாயகர், சுப்பிரமணியன், வெங்கடாசலபதி, மகாவிஷ்ணு என்றெல்லாம் நம்பிக் கும்பிட்டு வருகிற விதங்களில் கடவுளர் இல்லை. மக்களின் மனபயங்களை, குழப்பங்களை, தெளிவின்மைகளை போக்குவதற்காகவே உருவகிக்கப்பட்ட பிம்பங்கள் (images) தான் இவை எல்லாம். ஆனாலும், மனிதருக்கு தம்பிக்கை செலுத்த பற்றுக்கோடுகள் தேவை. அவர்களே உருவாக்கிக்கொண்ட இந்த பிம்பங்கள் பெரும்பாலோருக்கு உதவுகின்றன. அந்த விதத்தில் இவை நல்லவை. ஆகவே இவை இருக்கின்றன என்று மனிதர்கள் நம்புகிறார்கள். அநேகரின் சுயநலத்துக்கும் பேராசைக்கும் பணச்சுரண்டலுக்கும் இவை உதவுகின்றபோது இவை தீமைகளாகி விடுகின்றன. அப்போது இவையும் கோயில்களும் குறைகூறப்பட வேண்டியவை யாகின்றன.

அன்பு

Εξ- 35.

உடுமலைப்பேட்டை 25-3-86

அன்பு ரேவதி,

உன் கடிதம் கண்டு மகிழ்ந்தேன். நீங்கள் எல்லோரும் நலமாக இருப்பதை அறிய சந்தோஷம்.

இங்கும் அனைவரும் சுகம்.