பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 15

பெருங்குளத்தில் மீண்டும் 1974 ஆகஸ்டில் ஒருநாள் சி.சு. செல்லப்பாவுடன் நின்றதும் நினைவில் வந்தது. அங்கு உள்ள செங்போல் மடம் இப்போது வெளிச்சுவர்கள் நன்றாக இருக்க, உள்ளே மேல்தளம் இடிந்து பாழ்பட்டுக் கிடப்பதைக் கான முடிந்தது.

அன்பு

భg. శ్రీ,

சென்னை

  1. 1-6–94 பிரிய சகோதர. வணக்கம், மீண்டும் சென்னை வந்தாச்சு. மங்களகரமான வெள்ளியன்று! 9-ம் தேதி நயினார் ஸ்டேஷனுக்கு வந்தார். மாடர்ன்பிரெடும், சாந்தி ஸ்வீட் ஸ்டால் மிக்ஸ்சரும் வாங்கி வந்து அன்புடன் அளித்தார். 2-30க்கு விடைபெற்றுச் சென்றார். ரயில் 2-40க்கு புறப்பட்டது. -

சுற்றிச் செல்கிற பயணப் பாதை பற்றி அலுத்துக் கொள்கிறவர்கள் அலுத்துக்கொண்டிருக்கட்டும். எனக்கு இதுவும் மனோகரமான உல்லாச உலாதான். தமிழ்த் திருநாட்டின் பன்முகத் தோற்றங்களைக் கண்டு மகிழவும்,பரிதாபப்படவும் இத்தகைய பயணங்கள் வாய்ப்பு அளிக்கின்றன. திருநெல்வேலியிலிருந்து மதுரை போகிற பாதையில் நெடுகக் காட்சி அளிக்கிற வறண்ட பிரதேசங்களுக்கு மாறாக, தென்காசி போகிற வழியெல்லாாம்

.* ح همه مهم ته عة في سه وهي ع سخه به چنین جا می بیستم به

丞姿药 πει «την τ ην εξ ανα: " Ά : ير. بيجي بيريي هي f جايي يي عيسي بيبي في குளுகுளு இனிமைகளும் மலைத் தோற்றங்களு

விருந்தாகின்றன. வறண்ட வெறும் நிலப்பரப்புகளும் உண்டு.

பிறகு சிவகாசிப் பாதையில் நெடிய மலைகள், கூடவே வருவது போலவும், ஒரு இடத்தில் மலைகள் நோக்கி ரயில் ஒடிக்கொண்டிருப்பது போலவும் தோற்றங்கள். -

தென்காசி ஸ்டேஷனில் வீணாக 45 நிமிடங்கள் நிற்பாட்டப்படுகிறது வண்டி விருதுநகரில் 30 நிமிடங்கள். அப்புறம், அங்கங்கே கிராசிங் என்று அடிக்கடி நிற்பாட்டல்கள். ஆக, எழும்பூருக்கு 8-30க்கு வரவேண்டிய வண்டி 9-15க்கு வந்து சேர்ந்தது. எப்ப வந்தால் என்ன! நலமாக வந்ததே என்ற சந்தோஷம். ஆட்டோவில் வீடு சேர்ந்தேன் 9-40க்கு.

20 நாட்களுக்குப் பிறகு வந்து சேர்ந்தாச்சு உற்சாகத்துக்குக் குறைவில்லை. .

அன்பு

ఖి. ఉ.