பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

வல்லிக்கண்ணன்

ஒரு ஏழை மனிதன், தனது பழைய சைக்கிளை ரொம்பவும் நேசித்து வந்தான். அது திருட்டுப் போய்விட்டது. அவன் மிக வருந்தினான். இப்படிக் கதை போகும். தனது தேவைக்காக பழைய சைக்கிளை அவன் திருடினானா? அல்லது, தனது பழைய சைக்கிள் ஒரு சைக்கிள் கடையில் நிற்பதைக் கண்டு, அதை எடுத்து வரவும், திருடன் என்று பிடிபட்டு, போலீசில் அகப்பட்டு, கஷ்டப்படுகிறானா? - எனக்கு நினைவு இல்லை.

கடைசியாக, அவன் ஒரு பார்க்கில் காணப்படுவான். அவனுடைய சிறு மகனின் கையை அன்போடு இறுகப் பற்றிக்கொண்டு நடப்பான். அவனுக்கு ஏதோ சிறிது பணம் கிடைத்திருந்தது.

‘Let us Live. Let us live and enjoy at least for a day' Grgår p g går மகனிடம் சொல்கிறான்.

வாழ்க்கையில் எப்போதும் சிரமங்களை யும், பணத்தட்டுப்பாடையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், கொஞ்சம் பணம் கிடைத்தாலும், அதை செலவு செய்து சந்தோஷமாக் இருப்போமே என்று எண்ணுவது தான் மனித இயல்பு.

சந்தோஷமாக இருக்கவேண்டும். அதுதான் முக்கிய நோக்கம்.

வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு உரிய வாய்ப்புகளும் வசதிகளும் எல்லோருக்கும் எப்பவும் கிடைத்துவிடுவது இல்லை.

நான் நலமாக இருக்கிறேன். நீயும் கணேசனும், அப்பா அம்மா, ஆச்சி, மற்றும் வேலு, சங்கரா, ராதா, ரேவதி எல்லோரும் நலம் தானே?

அன்பு

శd. ఊ,