பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை - 14

8.783

அருமை நண்பர் குறிஞ்சிவேலன் அவர்களுக்கு,

2632.82 முதல் 6183 முடிய நாட்கள் மிக மனோகரமாக அமைந்திருந்தன. இனிய நாட்கள். இதம் தரும் அருமையான அனுபவங்கள். பசுமையும் குளுமையும் நிறைந்த பல இடங்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது: நண்பர்களின் பிரியமான தொடர்பும் உரையாடலும் நல்ல புத்தகங்களைப் படித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுடைய, உங்கள் குடும்பத்தினர் அனைவருடைய, அன்பும் பண்பும் நிறைந்த உபசரிப்புகள் - உள்ளத்தில் எண்ணும்தோறும் எண்ணும்தோறும், சிலிர்ப்பும் நெகிழ்ச்சியும் தருபவை. உங்கள் அப்பா, அம்மா, பெரியம்மா, மனைவி அனைவருக்கும் என் நன்றியும் வணக்கமும், -

அன்பு

భj.డి.

சென்னை

89.32 அன்புமிக்க நண்பர் அவர்களுக்கு,

வணக்கம்

மொழி பெயர்ப்பாளர் சங்க அமைப்பு கூட்டம் நடைபெற்று, சங்கம் அமைக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். நல்ல நோக்கம் நல்லதிட்டம் செயலில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். எனக்கு அழைப்பு அனுப்பியதற்காக நன்றி. இதுவரை எந்த அமைப்பிலும் - சங்கத்திலும் நான் உறுப்பினன் ஆகச் சேர்ந்து கொண்டதே இல்லை. அதற்கெல்லாம் எனக்கு நேரமும் கிடையாது. மேலும் சங்க நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் விழாக்கள் முதலியவற்றில் கலந்து கொள்ளும் ஆர்வமும் உற்சாகமும் எனக்கு வருவதில்லை. அதனாலேயே எந்த நிகழ்ச்சிக்கும் நான் போவதில்லை. போக்குவரத்து வசதிக்குறைவும் ஒரு கூடுதல் காரணம் ஆகும்.

அன்பு

ξΣ.Η. 3,