பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் - #9

வடுவூரார் நாவல்கள் கும்பகோணம் வக்கீல் 'திகம்பரசாமியார் துப்பறியும் வேலைகள் படித்து ரசித்தது உண்டு. 1930களில் தான். ஆரணி குப்புசாமியின் மோகனசுந்தரம் கற்கோட்டை ரகசியம்' இரண்டு தான் படித்திருக்கிறேன். க. ரகசியத்தில் ஜெனரல் உக்கிரசேனர் மறக்கமுடியாத பாத்திரம். ரங்கராஜூவின் ராஜாம்பாள் 'சந்திரகாந்தா படித்தது உண்டு. படமும் பார்த்தேன். பல பெண்களை நிறுத்தி சுவாமிகாள், இந்த ரகங்களில் எந்த ரகம் தேவை? என்று கேட்பது, படத்தில் ஒரு கவர்ச்சி அம்சம். அந்நாட்களில் நெடுக அடிபட்ட விஷயம். ஆயிரம் தலைவாங்கிய அதிசய சிந்தாமணி என்று ஒன்று படித்தேன். அது நீங்கள் குறிப்பிடும் சிந்தாமணி இல்லை என்று தோன்றுகிறது.

அன்பு

ÉRİ. $,

சென்னை

72-7-94

அன்பு நண்பர் அவர்களுக்கு, வணக்கம்.

நான் ஜூன் 13ல் சென்னையில் இருந்து தான் உங்களுக்குக் கடிதம் எழுதினேன். புன்னைக் காயல் பயணம் பற்றி எழுதியது அதில் தான்.

கடலில் கதிரவன் காட்சி, முத்துக்குளிப்பு பற்றி எல்லாம் ரசமாக எழுதியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் எனக்குக் கிட்டாது தான். எத்தனையோ அனுபவங்கள் கிடைக்காமலே போய்விட்டன: இனி எங்கே கிடைக்கும்!

இந்தியாவின் முக்கிய இடங்களை எல்லாம் பார்த்துவிட வேண்டும்; தமிழ்நாட்டி ன் அனைத்துப் பகுதிகளையும் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதெல்லாம் கனவுகளாகவே நின்று போயின. அதற்காக வருத்தப்படு வதற்குமில்லை.

இப்படி அனுபவங்களுக்காக - பார்க்க முடிந்த இடங்களுக்காக அவற்றின் மூலம் பெற்ற சந்தோஷங்களுக்காக மனநிறைவு அடைகிறேன்.

அன்பு

lெ. கி.