பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 2}

அப்படி விட்டுப் போக மனம் வருவதில்லைசிலருக்கு மரங்களை வெட்டி விற்பதும், முறித்துப் போடுவதும் அவர்களுக்கு உவப்பான காரியங்களாயின.

மின்சாரம் தாராளம், கட்டுப்பாடு, தட்டுப்பாடு கிடையாது.

தண்ணீர் குமிழியிட்டுக் கும்மாளி போடுகிறது. ஒடுகிறது. புரள்கிறது. வீணாகப் போகிறது.

'தண்ணிரை வீணாக்காதீர்கள். ஒவ்வொரு துளித் தண்ணிரும் மதிப்பு வாய்ந்தது என்று தமிழ் நாட்டில் ரேடியோ அலறிக் கொண்டிருக்கிறது. நெய்வேலியில் வாஷ்பேசின் குழாயில், பாத்ரூமில், லேவட்டரியில் தண்ணிர் எப்பவும் ஒடி வீணாகிக் கொண்டிருக்கிறது - குழாய்களில் சரியான மூடிகள்-திறுக்குகள் இல்லாததால்,

சுரங்கத்தில் தண்ணீர் சுரந்து கொண்டேயிருக்கிறது. நீரை இறைந்து வெளியேற்ற மோட்டார்கள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. பள்ளத்தை நோக்கி நீர்பாயும் - இயற்கை விதி. மோட்டார்பவர் இயக்கம் காரணமாக வெகு ஆழப் பள்ளத்திலிருந்து தண்ணிர் மிக உயர உயரத்துக்கு குழாய்கள் மூலம் மேலேறி வந்து தரையில் ஆறாக ஒடுவது சாத்தியமாகியிருக்கிறது.

மனித உழைப்பு, அறிவின் வலிமை, விஞ்ஞான சக்திகள், இயந்திர இயக்கங்கள், அபார சாதனை - இவற்றின் கூட்டு வேலைப்பாடு தான் நெய்வேலிச் சுரங்கம்.

அன்பு

ళ, శ్రీ.

சென்னை

23-7-83 அன்புமிக்க கல்யாணி, வணக்கம்.

எனது நேற்றையக் கடிதம் கிடைத்திருக்கும். நெய்வேலி இப்போது இளமையாக இருக்கிறது. வளர்ந்து கொண்டே இருக்கிறது. விஸ்தரித்து வருகிறது.

அதன் விஸ்தரிப்புக்கு ஈடுகொடுப்பதற்காக, புறநகர்ப்பகுதிகள் போல், நெருக்கமான சதுரக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இரண்டு அடுக்கு ஃபிளாட் முறைக் கட்டிடங்கள் தோன்றுகின்றன. இனி மூன்றடுக்கு, பலமாடிக் கட்டிங்கள் வளரக்கூடும்,