பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 27

சு. சமுத்திரம்

சென்னை.

72-19-7ஒ

அருமை நண்பருக்கு,

வணக்கம்,

. உங்கள் சோற்றுப் பட்டாளம் குறுநாவலையும், 'ஒரு கோட்டுக்கு வெளியே நாவலையும் படித்து ரசித்தேன்.

குடும்ப நாவல் என்றும், சமூக நாவல் என்றும் பலரும் என்ன என்னத்தையோ எழுதிக்கொண்டிருக்கிற காலத்தில், நீங்கள் உண்மையான சமூக எதார்த்தச் சித்திரங்களை உருவாக்கி வருகிறீர்கள். இதற்காக உங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

சமூக எதார்த்தப் படைப்புகள் என்று அநேகர் லட்சியகொள்கை-அரசியல் தத்துவ வெறியோடு, வாழ்க்கையோடு ஒட்டாத, இயல்புக்கு மீறிய நிகழ்ச்சிகளை அடுக்கிக் கதை பண்ணிக் கொண்டிருக்கிற நாட்களில், நீங்கள் வாழ்க்கையில் சகஜமாக நடக்கிற விஷயங்களையும், மனிதர்களின் இயல்பான தன்மைகளையும் போக்குகளையும், உயிருள்ள நடையில் நாவல்களாக உருவாக்கியிருக்கிறீர்கள். இது மகிழ்ச்சி தருகிறது.

'சோற்றுப் பட்டாளம் கச்சிதமாக அமைந்துள்ளது. தன்னலத்தோடும், ஏதாவது உள்நோக்கங்களை கருத்தில்கொண்டும், செயல்புரிந்து வயிறு வளர்த்து சந்தோஷப்படுகிற சராசரி மனிதர்களின் இயல்புகளை நன்கு சித்திரித்திருக்கிறீர்கள். சுந்தரியின் உணர்ச்சிகளும் உளப் போராட்டங்களும் கதை நெடுகிலும் நன்றாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. அழுது குமையும் அபலை போலிருந்த சுந்தரி, முடிவில் தனக்குத் தானே துணை என்று தைரியம் கொண்டு, துணிந்து தலைநிமிர்ந்து, சாப்பாட்டு மாடன்களை எதிர்த்து விலக்கிவிட்டு வெற்றிகரமாக விலகிப் போவதும், உதவக் கூடியவர்களிடம் சேர்ந்து கொள்வதும் அருமையான முடிவு. சோற்றுப்பட்டாளம் ரசிகனுக்கு மனநிறைவு தருகின்ற தரமான படைப்பு.

ஒரு கோட்டுக்கு வெளியே நல்ல நாவல். கிராம சமுதாயத்தில் நிலவுகிற சின்னத்தனங்களையும், மனித உருவில் நடமாடுகிற சுயநலமிகளின் கோழைகளின் - கயமைத்தனங்களையும், பணமும் செல்வாக்கும் பெற்ற ஒரு சிலரின் அடாவடித்தனங்களையும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். அவற்றை எதிர்த்துப் போராடத் துணிந்த