பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 3?

நான் இங்கே வந்த பிறகு, பத்திரிகைகள் பார்க்கக் கிடைப்பதில்லை. பல புத்தகங்கள் படித்தேன். திட்டம் மதிப்புரை எழுத வேண்டும். வேலைகள் நிறையச் சேர்ந்துவிட்டன. செய்யச் செய்ய, முடிந்த பாடாக இல்லை.

“தாமரை அக்டோபர் இதழ் வந்தது. இளையபாரதியின்

3.

"பொதுமைப் பூங்கா" பற்றிய கட்டுரையைப் படித்தேன்.

தி.க.சி வாரம் தோறும் கடிதம் எழுதுகிறார். நலம். நாடுவதும் அதுவே. வ.ரா. பற்றிய கட்டுரையை மட்டும் இன்று ஆபீசுக்கு அனுப்பியிருக்கிறேன். ரூ 9345க்கு மணியார்டர் இன்று கிடைத்தது.

அன்பு

Φλj. Η5.

ராஜவல்லிபுரம், 30-f{}-8(?

அருமை நண்பர் சமுத்திரம் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் கடிதம் 27-ம் தேதி கிடைத்தது. நீங்கள் சில பத்திரிகைகளுக்கும் கதைகள் எழுதி உதவியிருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

நண்பர் சிவபாதசுந்தரம் மகள் திடீர் மரணம் எய்தியது பெரும் அதிர்ச்சிதான். வாழ்க்கையும் மரணமும் எப்படி எப்படியோ அமைந்துவிடுகின்றன. மனிதர்களுக்கு.

நண்பர் பாக்கியமுத்து ஹார்ட் அட்டாக்கினால் சிரமப்பட்ட செய்தி வருத்தம் தருகிறது. இதற்குள் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குப் போயிருப்பார், நல்ல சுகம் அடைந்திருப்பார் என்று எண்ணுகிறேன்.

கதைகள் எழுதுவதோடு, சமூகப்பணியிலும் அக்கறை காட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உதவி செய்வதிலும் நீங்கள் ஈடுபட்டு, சுமுகமான ஏற்பாடுகளை செய்து முடித்ததை அறிய சந்தோஷம். பாராட்டுதல்கள். -

நண்பர் தி.க.சி 15 நாட்கள் விடுமுறையில் இருந்தாராம். எழுத்து வேலைகள் சிலவற்றை முடிப்பதற்காக, நவம்பர் 1 முதல் வேலைக்குப் போவார் என்று நினைக்கிறேன்.