பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 : வல்லிக்கண்ணன்

வாழ்க்கையில் ஏமாற்றம், தோல்வி என்று எதுவுமே கிடையாது. அவைகள் கூட அனுபவங்களே. அறிவை விசாலப்படுத்தும் திகழ்ச்சிகள் தான்.

உங்கள் முப்பத்தொன்பது வருஷங்களும் வீணடிப்பு அல்ல. அத்தகைய சோர்வு நினைப்பு மனசில் தோன்றியதே தப்பு.

அவரவர் உயிரோடிருக்க, முண்டியடித்து முன்னேற, எடுப்பாக, வாழப் பலரும் போராடிக் கொண்டிருக்கிற ஒரு போராட்டமே வாழ்க்கை என்றால், அதில் நீங்கள் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு சமாளித்து தின்று தலைநிமிர்ந்து, முன்னேற்றமே காட்டியிருக்கிறீர்கள். அந்த பலத்தில் மீது மேலும் மேலும் முன்னேறுவதில் - வளர்வதில் தான் உங்கள் வருங்காலமும் உழைப்பும் ஆற்றல்களும் ஈடுபடத்தப்பட வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

"உள்ளம் தேறிச் செய்வினையில் ஊக்கம் பெருக உழைப்போமேல் பள்ளம் உயர் மேடாகாதோ? பாறை பொடியாய் போகாதோ?”

புது வருஷ வாழ்த்துக்கள்.

,

శ. ,

ராஜவல்லிபுரம்.

33-##-33

அருண். நன்பர் சித்

ம் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் நீண்ட கடிதம் பெற்று மகிழ்ந்தேன். எழுதுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்ட போதிலும், விஷயங்களை ரசமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

"சரஸ்வதி காலம்', 'மணிக்கொடி காலம் முதலியவைகளை படித்து ரசித்ததை அறிய சந்தோஷம். சிறுகதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பது அதைவிட சந்தோஷம் தருகிறது.

உலகத் தமிழ் மாநாடு என்கிற கும்பல் மேளா"வை ஒட்டி, தி.கதிர் மலர் தயாரிக்கிறதா? தாமரை ஒரு மலர் தயாரிப்பதாகக் கடிதம் வந்திருக்கிறது.

தினமணிக்கதிர் மலரில் உங்கள் விளையாத பயிர் கதை