பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 39

கிட்டியது. நீங்கள் போனில் பேசியபோது, நான் திருநெல்வேலிக்கு வந்திருக்கிற தகவலை கூறியதாகவும் பாக்கியமுத்து சொன்னார்.

மறுநாள் பெருமாள்புரத்துக்கு அவர்கள் வீட்டுக்குப் போனேன். ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

நான் நலம். தி.க.சி. உடல்நிலை சீராக இல்லை. இருமல் இருக்கிறது பல நாட்களாக பல்வலி என்று பற்களை பல் டாக்டரிடம் காட்டி முக்கால்வாசிப் பற்களை எடுத்தாச்சு இன்னும் 5 பற்கள் இருக்கின்றன. இந்த வாரம் அவையும் நீக்கப்பட்டு விடும். பிறகு பல் செட் மாட்டிக்கொள்ளவேண்டும். .

நான் ராஜவல்லிபுரத்திலும் திருநெல்வேலியிலுமாக பத்து நாட்களை கொலை பண்ணியாச்சு. உருப்படியாக எதுவும் செய்யவில்லை. மகள்கள் இரண்டுபேர் என்கூட வந்திருத்தார்கள். 16-ம் தேதி மாலை சம்மர் ஸ்பெஷல் ரயிலில் அவர்கள் சென்னை திரும்பினார்கள்.

நான் 21-ம் தேதி கோயமுத்துர் போவேன். 24 ஞாயிறு அங்கே ஹோட்டல் அலங்காரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சி, பிறகு என்ன புரோகிராம் என்பது இப்பவே தெரியாது! மே இறுதிக்குள் சென்னை சேரவேண்டும் என்று எண்ணம். அது நடக்குமா, திட்டம் மாறிப்போகுமா என்பதும் தெரியாது. நடப்பவை அவை பாட்டுக்கு நடக்கும். வருவனவற்றை இயல்பாக ஏற்று நடந்து சந்தோஷமாக இருக்க வேண்டியது. அவ்வளவுதான்.

சம்புலிங்கம் கட்டுரை வரிசையில் முதல் கட்டுரைக்குப் பிறகு, ஜே.ஜே சில குறிப்புகள் பற்றியதையும், குருதிப்புனல் பற்றியதையும் படித்தேன்.

'குருதிப்புனல் பற்றி இரண்டே காலம் தான்-கதைச் சுருக்கம் மட்டுமே - இந்த வாரம் வந்துள்ளது. விமர்சனம் அடுத்த வாரம் என்று காணப்படுகிறது. -

போனவாரம், சுந்தர ராமசாமியின் சீடர்கள் போக்கு பற்றி அடுத்தவாரம் கவனிப்போம் என்பது கடைசி வரியாக இருந்தது. அது அத்தோடு சரி போலும். இ.பா. க.ரா.வின் சீடர் இல்லை.

சென்னை சேர்ந்த பிறகு கடிதம் எழுதுவேன். நலம். நாடுவதும் அதுவே.

அன்பு