பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கன்னன்

சென்னை.

27-10-92

அன்பு மிக்க நண்பர் அவர்களுக்கு,

வணக்கம், முதலிலேயே, உங்களுக்குப் பிடிக்காத செய்தியை சொல்லி விடுகிறேன். நேற்று நான் விழுப்புரம் போகவில்லை. கலந்து கொள்வதாகச் சொல்லிவிட்டு, குறிப்பிட்டபடி போகாமல் இருப்பது தப்புதான். என்ன செய்வது! அவ்வப்போது நான் இப்படி நடந்துகொள்வது தவிர்க்க இயலாதது ஆகிவிடுகிறது.

விழுப்புரத்துக்கு என்.பி.டி நிகழ்ச்சிக்கு போகத்தான் வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உடல்நிலை ஒத்துவரவில்லை. 18 நாட்கள் வெளியூர் பயணத்தின் போது வயிறு பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பசிஇன்மை - வாந்தி வருதல் முதலியன. அதனால் அநாவசியமான சோர்வு. (உடல்+உள்ளம்) ஸ்ேரி, நான் போகலேன்னாத் தான் என்ன ஒண்னும் கெட்டுப்போகாது என்று மனம் முடிவு செய்தது.

போய், திரும்பினால் சோர்வு அதிகமாகும். மேலும் இரண்டு மூன்று நாட்களுக்கு உழைக்க உற்சாகமே இராது. வேலை ரொம்ப நிறையச் சேர்ந்து போச்சு. அன்பும் அனுதாபமும் கொண்டவர்கள் எனக்கு உதவ வேணும் என்ற நல்லெண்ணத்தில் வேலைகள் தருகிறார்கள். அவை அதிக உழைப்புக்கே வழி செய்கின்றன. இதே ரீதியில் வண்டி ரொம்ப நாள் ஓடாது என்பது எனக்கே தெரிகிறது. அட, ஒடுகிற வரை ஒடட்டும்; ஒருநாள் டபக்குனு ஒடிஞ்சு விழுந்தா ஒழிஞ்சு போகட்டும் என்ற மனநிலை. சுயஅளப்புகள் போதுமே!

'சாணக்கியன் (16-10-92) வாங்கிப் படித்தேன். அதில் உள்ள விஷயங்களை நீங்கள் அப்படியே சொல்லி விட்டீர்கள். அதனால், படித்ததையே திரும்பவும் படித்த மாதிரித் தோன்றியது. சொல்லி யிருப்பதையும், சொல்லியிருக்கிற முறையும் சரிதான்.

உங்கள் கடிதம் கிடைத்ததாக தி.க.சி எழுதியிருக்கிறார். 'சாணக்கியன் வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அன்பு

ఢ, ఢీ,