பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 喀莒

சென்னை,

73-73-95

அருமை நண்பர் அவர்களுக்கு, வணக்கம். எனது சந்தோஷங்களை அதிகப்படுத்தும் விஷயம் ஒன்று இன்று சேர்ந்தது. வாககி 1992 ஆகஸ்ட் 21-22 இதழில் திப்பனம்பட்டி சம்புவிங்கம் எழுதிய இலக்கியசர்ச்சை கட்டுரை இன்று எனக்குப் படிக்கக் கிடைத்தது.

உலகத்தில் எத்தனையோ விசித்திரங்கள், விநோதங்கள், வக்கிரங்கள் - என்னையும் சேர்த்து! இப்படியாப்பட்டவர்களில் ராம்குமார் என்கிற இளைஞரும் ஒருவர். பழைய பத்திரிகைகளில் கண்டெடுத்த நறுக்குகளை (கட்டுரைகள், கதைகள், துணுக்குகள், விவகார விஷயங்கள் போன்ற பலவற்றையும் : சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு தருவது அவருடைய வாழ்க்கை நடவடிக்கைகளில் ஒன்று. எனக்கும் அவ்வப்போது உதவுவார். இன்று அவர் கொண்டு தந்த கட்டிங்குகளில் மேற்படி சமாச்சாரமும் இருந்தது. தமிழ் தாத்தா தி செகண்டாக வன கனா.வை விவரித்திருப்பது. அத்துடன் வ.க.வின் பெண் எனும் சிறுகதையை சிலாகித்து, இது தான் சிறுகதை. இதுதான் வல்லிக்கண்ணன் என்று முடித்திருப்பது. ஆகா, பிரமாதம்!

'பெண் என்கிற நல்ல கதையை படிக்கிறவர்கள் ரசிப்பார்கள். அதை பார்க்கிறவர்களும் ரசிக்கும் படியாக ஜே டி-ஜெர்ரி படமாக்கியிருந்தார்கள். தங்கர்பச்சான் காமிராத்திறத்தில் அது குளுகுளு இனிமை பெற்று விளங்கியது. 1995 ஜனவரி 1-ம் தேதியும் 8-ம் தேதியும் அதை சென்னை தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அருமையான டிவி படம் அது. பெண் என்ற பெயரில் சுகாசினி ஒரு தொடரை ஏற்கனவே தயாரித்து ஒளிபரப்பியிருந்ததால், இந்தப் பெண் டிவிக்காக தேவகி ' என்று பெயர் மாற்றம் பெற்றிருந்தான்.

தாமரை ஆகஸ்ட் இதழ் எனக்கும், தி.க.சி.க்கும் இன்றுவரை கிடைக்கவேயில்லை. மகேந்திரனுக்கு ஒரு கடிதம், யோகநாதனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். எழுதினேன், அவ்வளவுதான். எதிரொலி இல்லை.

நலம். நாடுவதும் அதுவே.

அன்பு

ఛీ! శ్రీ.