பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 5 §

நீங்கள் குறுநாவல்கள் எழுதியுள்ளதை அறிந்து மகிழ்கிறேன். இப்பவும் புதிதாக ஒன்று எழுதிக் கொண்டிருப்பதும் சந்தோஷம் தருகிறது. இளம் வயசிலேயே விதம்விதமான அனுபவங்களை பெற்றிருக்கிறீர்கள். பலப்பல இடங்களை பார்த்திருப்பீர்கள். இவை உங்கள் உள்ளத்தின் சிறகுகள் விசாலித்து, விசிறிச் சிலிர்த்து புதிய புதிய எண்ண உலகங்களிலே சஞ்சரிக்க உதவட்டும். வாழ்த்துக்கள்.

அன்பு

ఖి!. ఢీ,

சென்னை.

18-1-94

அன்பு நண்பர் முஸ்தபா,

வணக்கம்.

பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி. மகிழ்ச்சி. பொங்கல் நாள் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது.

புதுவருட வாழ்த்துக்கன். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு புதுவருடம் துணைபுரியட்டும்.

முன்பே உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று எண்ணினேன். நண்பர் வட்டம் டிசம்பர் இதழில் விட்டு என்று நீங்கள் எழுதியிருந்த கதையைப் படித்து ரசித்தேன்.

நல்ல கதை. உயிர்களிடத்து அன்பு காட்டும் மென்மையான உள்ளத்தின் தவிப்பை அழகாக விவரிக்கிறது. பாராட்டுக்கள்.

இதழ் கிடைத்த சில நாட்களில் நான் வெளியூர் போக நேரிட்டது. தஞ்சாவூர். மன்னார்குடி என்று பத்து நாட்கள் போனேன். குடும்ப சம்பந்தமான வேலை.

எப்படி இருக்கிறீர்கள்? வழக்கம் போல் தான் என்கிறீர்களோ? பரவால்லே. சிரமங்கள், சிக்கல்கள் இல்லாமல் சீராக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தால் சரிதான்.

இங்கு மழை வெளுத்து வாங்கியது. பிறகு குளிர் வந்தது. திடீரென்று குளிர் குறைந்து, வெயில் கடுமை பெற்று வருகிறது. இயற்கை அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.