பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வல்லிக்கண்ணன்

நீங்கள் புத்தகங்கள், பத்திரிகைகள் படிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? நல்ல புத்தகங்கள் கிடைக்கின்றனவா?

இதுவரை எத்தனை கதைகள் எழுதியிருப்பீர்கள்? தொடர்ந்து எழுதுங்கள். எழுத எழுத வளர்ச்சி பெறமுடியும்.

கப்ரபாரதி மணியனோடு தொடர்பு உண்டா? நீங்கள் அங்கு தனியாக ஏதாவது அறையில் இருக்கிறீர்களா? அல்லது வேறு நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு வாழ்க்கையா?

எப்படி இருந்தாலும் மனம் உற்சாகமாக இருக்கவேண்டும். கிட்டாத இன்பங்களை எண்ணி ஆசைகளை வளர்ப்பதை விட, அன்றாடம் எதிர்ப்படுகிற-கலபமாக சித்திக்கிற - சின்னச் சின்ன சந்தோஷங்களை ரசித்து மகிழக் கூடிய மனம் வேண்டும். என் கவிதைகளில் ஒன்று இது

நண்பரற்றுத் தனியனாய் இருப்பதில்லை என்றும் நான் இருளும் ஒளியும் விண்ணும் வெளியும் இரவின் வானத்துச் சுடர்களும் பகலின் பற்பல வனப்புகளும் மரங்களும் மலர்களும் செடிகளும் இலைகளும் புல்லும் பாதையும் பறவைகள் ஒலியும் தெருக்களும் ஊரும் ஒடும் நதியும் அலையெறி கடலும், புத்தகம் பலவும், பேனாவும் தாளும்இப்படி எல்லாம் எல்லாம் என்னுடன் பேசும் சிரிக்கும் கதைகள்

சொல்லும் தனிமை கூட என் இனிய நண்பனேயாகும்.

அன்பு

©Ꮜ. &.