பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S卓 வல்லிக்கண்ணன்

சாத்துர், சிவகாசி, ராஜபாளையம், பூரீவில்லிபுத்துர் பெயர் சொல்லும் எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். விருதுநகர் பற்றிக் கூறும் எழுத்தாளர் எவரும் இல்லை. முன்பு ஆசைத்தம்பி என்பவர் இருந்தார். அப்புற்ம் எவரும் வரவில்லை என்றே நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது போல, அங்கிருந்து ஒரு சிறுபத்திரிகை கூட வரவில்லை தான். ஆகவே, அண்ணன் திருவள்ளுவர் சொன்னது மெத்தச் சரி; இருவேறு உலகத்து இயற்கை திருவேறு, தெள்ளியராதல் வேறு வியாபாரம் மூலம் பணம் மிகுதியாகப் பண் ண க் #೬೬-ಓ! நபர்களை விருதுநகர் நெடுக அனுப்பிவைத்திருக்கிறது. அது போதும் என்று அவ்வூர்க்காரர்கள் கருதியிருக்கலாம்.

நீங்கள் படிப்பில் நாட்டம் கொள்ளாது, பத்திரிகைகளைப் புரட்டுவதிலும், அரட்டை அடிப்பதிலும் சுற்றுவதிலும நாட்களைக் கழிப்பதாக இரண்டு கடிதங்களிலும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

சுயகட்டுப்பாட்டுடன், உங்கள் போக்கை நீங்களே மாற்றிக் கொள்ளவேண்டிய விஷயத்தில் நான் என்ன அறிவுரை கூறமுடியும்?

பத்திரிகைகள் படிப்பதோடு, வேறு விஷயங்களும் படிக்கவேண்டும் என்கிற ஒரு தாகம்-ஒரு பசி-உள்ளத்தில் ஏற்படவேண்டும். அரட்டை மனமகிழ்வையும் சுலபப்பொழுதுபோக்கையும் தரும். கிடைக்கிற ஒய்வு நேரம் முழுவதையும் அதில் ஈடுபடுத்துவது சோம் ஆல் சுகவாச மோகமேயாகும். நண்பர்களோடு சிறிது நேரம் உரையாடி மகிழ வேண்டியதுதான். ஊர்சுற்றுவதும் தப்பு இல்லைதான். ஆனால் படிப்பிலும் மனசை செலுத்துவது நல்லது. படிப்பதற்குப் புத்தகங்கள் இல்லை என்கிறீர்கள்.

உங்கள் பள்ளிக்கூட லைபிரரியில் பொது நூல்களும் வாங்கி வைக்கப்பட்டிருக்கும் தானே? அநேக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் புத்தகங்களை வாங்கிப் பாதுகாப்பில் வைக்கிறார். ஆசிரியர்கள் விரும்பிப் படிப்பதில்லை; மாணவர்களுக்கு நாங்கள் கொடுப்பதில்லை என்றும் சொல்கிறார்கள். உங்கள் பள்ளி நிலைமை எப்படியோ ராஜபாளையத்தில் பல எழுத்தாளர்கள் (கொ.மா. கோதண்டம், ஜகந்நாத ராஜா போன்றவர்கள்) உண்டு. அவர்களை அறிமுகம் செய்துகொண்டு புத்தகங்கள் இரவல் பெறலாம்.

அன்பு

Gos. &.