பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 57

அகில இந்திய நோக்கில், இப்படி ஒரு கருத்தரங்கு நடந்தது இது தான் முதல் தடவை. க.நா. சுப்ரமண்யம் தான் அதற்குத் துண்டுதல். டில்லி தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் ஒரு கூட்டத்தில் எங்களைப் பாராட்டி கவுரவித்தது. -டிச. 7-ம் தேதி. 2-ம் தேதி இரவு நான், கந்தசாமி, அசோகமித்திரன் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் பிரயாணமானோம். 4ல் சென்னை சேர்ந்தோம்.

நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து மழை தான்.

ஆனாலும், நகரப் பகுதிகளில் பெய்து ரோடுகளையும் பள்ளப் பகுதிகளையும் ஆறுகளாகவும் குளங்களாகவும் மாற்றுகிற மழை ரெட்ஹில்ஸ், பூண்டி, சோழவரம் ஏரிகள் பக்கம் பெய்யவில்லை. ஏரிகள் நிரம்ப வழியில்லை. இதுவரை கால்வாசி ஏரிகூட தண்ணிர் சேரவில்லை. எனவே, 2 நாட்களுக்கு ஒரு தடவை தான் வாட்டர் சப்ளை’. சிறிது நேரம் அதுவும் எல்லாப் பகுதிகளுக்கும் சீராக வருவதில்லை. 1987ஐ சென்னை ஒரு மாதிரி சமாளித்து விட்டது. 1988ல் வறட்சியும் தண்ணீர்த் தட்டுப்பாடும் படுமோசமாகத் தான் இருக்கும்.

நலம். நலம் தானே?

அன்பு

ராஜவல்லிபுரம். 24-6-88 அன்பு மிக்க நண்பர், வணக்கம். ஞாயிறு மாலை நீங்கள் இவ்வூருக்கு வந்து, உரையாடிச் சென்றது சந்தோஷம் நிறைந்த மனோகரமான அனுபவம்-இரண்டு பேருக்குமே.

நீங்கள் மட்டும் அல்ல, பலரும் என்னிடம் அவ்வப்போது கேட்கிற கேள்வி தான் - சென்னையில் வசித்துவிட்டு ராஜவல்லி புரத்தில் எப்படி நாளோட்ட முடிகிறது என்று.

நான் சின்ன வயசிலிருந்தே ஒதுங்கி வாழப் பழகிவிட்டவன். விலகி இருந்து வேடிக்கை பார்த்து மகிழும் இயல்பினன். கனவுகளிலும் கற்பனைகளிலும், அவற்றிலேயே வளர்ந்த (வளர்க்கப்படுகிற) புத்தகங்களிலும் ஆழ்ந்து போகிறவன். மனிதர்களோடு நெருங்கிப் பழகாதவன்.

அதனால் நான் நாகரிகமும் பரபரப்பும் மிகுந்த சென்னையில்