பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S8 வல்லிக்கண்ணன்

இருப்பதும், அமைதியும் வசதிக்குறைவுகளும் நிறைந்த ராஜவல்லி புரத்தில் இருப்பதும் ஒன்றுபோல் தான். எங்கிருந்தாலும் எவரும் என்னுடன் பேசிப்பழகுவதில்லை. நானும் படிப்பது-எழுதுவது-சும்மா அங்கும் இங்கும் போவது ஆகியவற்றிலேயே ஈடுபட்டு, நேரம் போதவில்லையே என்று உணர்வதுதான் நியதியாக இருக்கிறது.

இந்தப் பெரிய வீடு சில வருடங்களுக்கு முன்பு மிகத் தனிமை உடையதாக இருந்தது. பின்பகுதியில் யாரும் வாடகைக்கு இருக்கவில்லை. வேலை செய்கிற முதியவளும் பெரும்பாலும் வீட்டில் இருக்கமாட்டாள். மகள் இருக்கிற ஊருக்குப் போய்விடுவாள். அல்லது எங்காவது போய் பொம்பிளைகளோடு பேசிப் பொழுது போக்கிக் கொண்டிருப்பாள். யாருமே இல்லாத அமைதியும் தனிமையும் எனக்கு வெகுவாகப் பிடித்திருக்கும். சமீப வருடங்களில் அவள் தன் இஷ்டத்துக்கு வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருப்பதால், அந்தப் பக்கம் ஆட்கள் பழக்கம் இருக்கிறது. இந்தப் பக்கம் அவளுடைய மகள், பேரன் பேத்திகள், பூட்டன் பூட்டி என்று அடிக்கடி கும்பல் மிகுந்து, அமைதி போய் விடுகிறது. வசதிக் குறைவுகளும் ஏற்படுகிறது. இது எனக்கு சங்கடமாக இருக்கிறது.

'பிணையல் கதைத் தொகுதியைப் படித்துவிட்டேன்.

மலர் அமுதன் கதைகள் நடைச்செறிவுடன் எழுதப்பட்டுள்ளன. முதல் கதை பிணையல் மட்டுமே நாஞ்சில்நாட்டு பேச்சுத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. மற்றவை கலப்படமான நடையிலேயே உள்ளன. பல வெறும் ஸ்கெட்ச்சஸ் ஆக உள்ளன. கதைகளாக அமையவில்லை. ஆனாலும், நல்ல முயற்சிகள் தான்.

தீஸ்மாஸ் டி செல்வா கதைகள் கதைகளாக அமைந்துள்ளன. 'பைட்டயர்' அங்கதம் அல்லது நையாண்டி) கலந்து ரசமாக இருக்கின்றன.

மலர் அமுதனுக்கும் இன்று கடிதம் எழுதியிருக்கிறேன். நண்பர் ஜெயபாலனுக்கு என் வணக்கம்.

அன்பு

ళ :

சென்னை. 25-77-88

அன்புமிக்க நண்பர்,

வணக்கம். உங்கள் 19-11-88 கடிதம் 21-ம் தேதி இட்ைத்தது.