பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் §§

நான் சென்னையில் தான் இருக்கிறேன். எங்கும் போகவில்லை.

தீபாவளி வாரத்தில் சில தினங்கள் நல்ல மழை பெய்தது. பின்னரும் சில நாட்கள் அவ்வப்போது மழை வந்து போனது. இதனால் எல்லாம் ஏரிகளில் ஒரளவுக்குத் தண்ணீர் பெருகியுள்ளது. குடிதண்ணீர் பிரச்னை குறைந்திருக்கிறதே தவிர, தட்டுப்பாடு முழுதாக நீங்கிவிடவில்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் தான் குடிதண்ணிர் சப்ளை. தண்ணிருக்காகப் பலரும் அலைகிற அலைச்சல்கள், இப்பவும் எங்கும் காணமுடிகிறது.

தீபாவளி வந்துபோனது. வழக்கம் போல் ஜனங்கள் கொண்டாடிக் களித்தார்கள். 'கலைமகள்', 'கல்கி', 'அமுதசுரபி, 'இதயம் பேசுகிறது. பெரிய அளவில் தீபாவளி மலர்களை வெளியிட்டுள்ளன. பார்த்தேன். படிக்கவில்லை. எல்லா வருடங்களையும் போல் தான் இருக்கிறது. புதுமை இல்லை.

'காலச்சுவடு நாலாவது இதழ் தரமாக அமைந்துள்ளது. நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான். நண்பர் சுரா, ஒரு வருடம் பத்திரிகையை வெற்றிகரமாக நடத்திவிட்டார். தொடர்ந்து நடத்தப் போதுமான ஆதரவு அவருக்கு கிடைத்துக் கொண்டுதானிருக்கும்.

இளமை காலம் என்றொரு புதிய வாரப்பத்திரிகை வருகிறது. 3 இதழ்கள் வந்துவிட்டன. மேத்தா ஒரு பக்கக் கட்டுரை. "தராசு’ "ஜூனியர் விகடன் போல் மற்றுமொரு பத்திரிகை. ஏ. கப்பட்ட படங்கள். செக்லை அதிகமாகக் கொண்ட கதைகள், கட்டுரைகள். விற்பனை அதிகம் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. தீபாவளி நாளில் வந்துவிடும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட மங்களம் வாரஇதழ் இன்னும் வரவில்லை. மலையாள வாரப் பத்திரிகை நடத்துகிறவர்கள், விநியோக ஆபீசை கோவையிலும், ஆசிரியர் குழு அலுவலகத்தை சென்னை மவுண்ட் ரோடிலும் கொண்டு செயல்படுகிறார்கள். பத்திரிகை கண்டிப்பாக வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. மேலும் எத்தனையோ புது வாரப் பத்திரிகைகள், நாளேடுகள்.

நீங்களும் உங்கள் துணைவியும் நலம்தானே? நான் என் அண்ணா, அண்ணி, பிள்ளைகள் எல்லோரும் நலம்.

நண்பர் ஜெயபால் நலமாக இருப்பதை அறிய மகிழ்ச்சி.

அன்பு

$೬}, <್ಲಿ,