பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வல்லிக்கண்ணன்

எழுதியிருக்கிறார். தாய் வார இதழில் பிரசுரமான இக்கட்டுரைகளை நர்மதா பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. ஒளிவு மறைவு இல்லாமல் தனது அனுபவங்களையும் எண்ணங்களையும் பாலகுமாரன் எழுதியுள்ளார். சுவாரஸ்யமாக இருக்கிறது.

நண்பர் ஜெயபாலுக்கு வணக்கம். அவரது நலம் அறிய மகிழ்வு.

ராஜவல்லிபுரத்துக்கு இப்போது போகவில்லை. ஜனவரி-பிப்ரவரியில் தான் போக இயலும்.

அன்பு

QA. i.

ராஜவல்லிபுரம். #9-7-90

அன்பு மிக்க நண்பர், வணக்கம், உங்கள் 3-7-90 கடிதம். மகிழ்ச்சி. நான் ஜூன் 25ல் இவ்வூர் சேர்ந்தேன். நலமாக இருக்கிறேன். ஜூலை 7ம்தேதி ராஜபாளையம் போனேன். கொ. மா. கோதண்டம், ராஜபாளையம் எழுத்தாளர்கள் 23 பேரின் சிறுகதைகளை தொகுத்து 'புதிய முகில்கள் என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அதன் வெளியீட்டு விாழாவுக்கு என்னை அழைத்திருந்தார். கே. சி. எஸ். அருணாசலமும், டாக்டர் சி. கனகசபாபதியும் வந்திருந்தார்கள். நல்ல இலக்கிய நிகழ்ச்சி.

சென்னையில் சோவியத் செய்தித் துறையில் 25 வருடங்கள் பணிபுரிந்த திக சிவசங்கரன் திருநெல்வேவிக்கே வந்துவிட்டார்-ஒய்வு பெற்று.

தோப்பில் முகம்மது மீரான் என்றொரு புதிய நண்பர். குமரி மாவட்டம் தேங்காபட்டணத்தை சேர்ந்தவர். 'ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற அருமையான நாவலின் ஆசிரியர்.

தாங்கள் மூன்று பேரும் 14ம் தேதி திருச்செந்துச் போனோம். களந்தை பீர்முகம்மது என்ற எழுத்தாளர் அங்கு இருக்கிறார். வேறு சில இளம் எழுத்தாளர்களும். அவர்களை சந்தித்து உரையாடினோம். மறுநாள், பக்கத்தில் உள்ள ஆறுமுகனேரி-செல்வராஜபுரம் போனோம். அன்று இரவே திருநெல்வேலி வந்து சேர்ந்தோம்

நலமாக இருக்கிறேன். ஆகஸ்ட் மாதமும் இவ்வூரில் தான்.