பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் - 65

விசேஷம் ஒன்றும் இல்லை. சும்மா ஒரு மாறுதல். அவ்வளவு தான்.

நண்பர் ஜெயபாலன் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கும் இன்றுதான் எழுதுகிறேன்.

'காலச்சுவடு 1990ல் ஒரு இதழ் கூட வரவில்லை. எப்போது வரும் என்றும் தெரியவில்லை. கடிதம் எழுதுகிறவர்களுக்கு இதழ் வரும் என்றுதான் கந்தர ராமசாமி பதில் எழுதிக்கொண்டிருக்கிறார். செகந்தராபாத்திலிருந்து சுப்ரபாரதிமணியன் நடத்தும் காலாண்டிதழ் கனவு ஒழுங்காக வந்து கொண்டிருக்கிறது.

பாளையங்கோட்டையில் பாக்கியமுத்து நடத்துகிற நண்பர் வட்டம் மாத இதழுக்கு மூன்றாண்டுகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து வரும்.

விருதுநகருக்கு ஒருமுறை வரவேண்டும் நான். எப்போது சவுகரியப்படும் என்று தெரியவில்லை.

அன்பு

ఇH. డి.

சென்னை.

4-2-93

அன்பு மிக்க நண்பர், வணக்கம், உங்கள் 22-1-91 கடிதம் பெற்று மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் அனைவரும் நலமாக இருப்பதை அறிய சந்தோஷம்.

நானும், என் அண்ணாவும், குடும்பத்தில் அனைவரும் சுகம். RMS ஊழியர்கள் வேலை நிறுத்தம் தபால் போக்குவரத்தை வெகுவாக பாதித்தது. அதனால் ஜனவரியில் நான் கடிதம் எழுதவில்லை. -

தினமணி-தமிழ் மணியில் தொடர்ந்து சில புத்தக மதிப்புரைகள் (நான் எழுதியவை) வந்தன. அவற்றை நீங்கள் படித்ததை அறிந்தேன். இன்னும் இரண்டு மூன்று புத்தகங்களுக்கு மதிப்புரை வரவேண்டும். 'தீபம்' நா. பார்த்தசாரதி அஞ்சலிக்கூட்டம் டிசம்பரில் சிறு அளவில் நடைபெற்றது.

க. சமுத்திரம் நாவல் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாடமிப்