பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6& வல்லிக்கண்ணன்

பரிசை பெற்றதைப் பாராட்டி ஜனவரி 22ம் தேதி மயிலாப்பூரில் ஒரு கூட்டம் நடந்தது.

இவ் இரண்டிலும் நான் கலந்துகொண்டேன். ஜனவரி 7,89 தேதிகளில் சென்னை பல்கலைக்கழகம் இலக்கியப் பிரிவில் ஒரு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்த்தும் வாய்ப்பு கிட்டியது.

30 வருடங்களில் தமிழ் புத்தக வெளியீட்டின் வளர்ச்சி என்பது பொருள். 1. 1940களிலும் அதுக்கு முன்னரும் 2. 1950முதல் 1970கள் முடிய 3. 1980களில் புத்தக வெளியீட்டு நிலை.

மூன்று கட்டுரைகள் எழுதிப் படித்தேன். 120 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வரும். புத்தகமாக வெளியிட முயலவேண்டும்.

'கணையாழி வடிவ மாற்றம் பெற்றுள்ளது. வண்ணநிலவன் குங்குமம் இதழில் 4 கதைகள் எழுதினார். பிறகு தாய்' இதழில் 4 கதைகள். அவர் மீண்டும் சுறுசுறுப்பாக எழுதுகிறார். நன்றாகவும் எழுதுகிறார்.

இந்த வருடம் அகிலன் நினைவுப்பரிசு ஜெயமோகன் எழுதிய 'ரப்பர் என்ற நாவலுக்கு அளிக்கப்பட்டது. ஜெயமோகன் நன்றாக எழுதக்கூடியவர். அழகான -செறிவான தமிழ்நடை அவருடையது. ‘ரப்பர் நல்ல நாவல்தான்.

நண்பர் ஜெயபாலுக்கு என் அன்பு வணக்கம்.

அன்பு

சென்னை.

18-}}-93

அன்பு மிக்க நண்பர் ரெத்தினசுவாமி அவர்களுக்கு,

வணக்கம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்த உங்கள் 12ம் தேதிக்கடிதம் (நேற்று கிடைத்தது) ரொம்ப சந்தோஷம் தந்தது. உங்கள் நினைவு என்றும் உண்டு. கடிதம் எழுதலாம் என்று நினைப்பேன்; நீங்கள் விருதுநகரில் இருப்பீர்களோ இல்லையோ என்ற எண்ணம் எழும். எழுதாமலே இருந்துவிட்டேன். நலம்தானே? மனைவியும் குழந்தைகளும் சுகமா? நான் நலம். அண்ணியும் பிள்ளைகளும் நலமாக இருக்கிறார்கள். சென்னையிலும் தொடர்ந்து நல்ல மழைதான். தீபாவளியன்றும் மறுநாளும் மழை விட்டிருந்தது. தீபாவளியை கொண்டாடியவர்களுக்கு உற்சாகம் தான். பிறகு மீண்டும்